ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எங்களுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை இன்று வெள்ளிக்கிழமை(16) இலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நான் கையளிப்பேன்.

சாதாரண உறுப்பினரிலிருந்து தலைவர் வரை, அரை நூற்றாண்டுக்கு மேலாக பல அர்ப்பணிப்புகளுடன் பாதுகாத்து கட்டிக்காத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாக பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சத்தை நான் கண்டுகொண்டேன். அதற்கு எனக்கு விருப்பமில்லை.

எங்களுடைய தாய் நாட்டை உண்மையாக பாதுகாப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஐக்கியத்துடன் வைத்துக்கொள்வது எங்களுடைய ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.

அதேபோல, புதிய தலைமையும் நிறைவேற்று குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகிக்கின்றவர்களும் கட்சியை முழுமையாக, தேசத்தின் அபிமானத்துக்காக வழிநடத்தவேண்டும்.

கட்சி அங்கத்தவர்களின் பாதுகாப்பு மற்றும் கட்சிக்குள் ஜனநாயகத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட விவகாரங்களின் மீது சகலரும் கவனம்செலுத்துவர் என்பது எனது நம்பிக்கையாகும்.

அதேபோல, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எனக்கு வாக்களித்த 50இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பிரார்த்தனை மற்றும் அபிலாசைகளுக்காக நான் எதிர்காலத்தில் உங்களுடன் இருப்பேன் என்பதனையும் கவனத்தில் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக உங்கள் அனைவருக்கு இத்தருணத்தில் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

– See more at: http://www.tamilmirror.lk/137756#sthash.5gvlhc7W.dpuf

Share.
Leave A Reply