அப்பாடக்கர், மாப்ள சிங்கம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இறைவி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. ஆனால், நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் அவரது மார்க்கெட் எகிறுமா இல்லை படுத்துக்கொள்ளுமா என்பது தெரியவரும்.
சினிமாவில் பல மேடு பள்ளங்களை பார்த்தவர் அஞ்சலி. அதனால் இந்த முறை அவர் மிகவும் உஷாராக இருக்கிறாராம். முக்கியமாக, தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் கிடைத்து வருகிறதே என்பதற்காக அவர் தனது தாய்மொழியான தெலுங்கு சினிமாவை கைவிடவில்லை.
ஒன்று கைவிட்டாலும் இன்னொன்று தக்க சமயத்தில் கைகொடுத்து காப்பாற்றும் என்கிற ரீதியில் தெலுங்கு சினிமாவையும் கெட்டியாக பிடித்து வைத்துள்ளாராம்.
தற்போது தெலுங்கிலும் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. அதோடு தமிழில் அவருக்கு சாந்துவான கதாபாத்திரங்கள் கிடைக்கும் நிலையில், தெலுங்கில் அதிரடி கதாபாத்திரங்கள் கிடைக்கிறதாம்.
இதனால், இதுகூட எனக்கு ஒரு புதிய அனுபவமாகவே உள்ளது என்று கூறியபடி இரண்டு மொழிக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அஞ்சலி.