பிலியந்தலையில் வீடொன்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கார் தொடர்பில் நாம் வினவிய போது பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

அந்தக் காரை கொண்டுவந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜப்பானில் இருந்து எம்முடன் தொடர்பு கொண்டு பல முக்கியமான விடயங்களைத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க

பிலியந்தல அரவ்வல போகுந்தர வீதியில் வீடொன்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கார் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் போது காரில் இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருக்கவில்லை. பின்னர் பொலிஸார் அதனைக்கொண்டு செல்லும் போது பின்புற இலக்கத்தகட்டினை கண்டுகொள்ள முடிந்தது.

மோட்டார் வாகன திணைக்களத்தில் இந்த கார் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply