இரா­ணு­வத்தைக் கொண்டு ஆட்­சியை தக்­க­வைப்­ப­தற்­காக ஒன்­பதாம் திகதி அதி­காலை கடந்த அர­சாங்­கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்­கொண்ட முயற்சி குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

இது தொடர்பில் பல்­வேறு அதி­கா­ரிகள் சாட்­சி­ய­ம­ளித்­து­வ­ரு­கின்­றனர் என்று சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

இலங்­கையில் இரா­ணு­வத்தின் துணை­யைக்­கொண்டு ஆட்­சி­ய­மைப்­பது என்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும். காரணம், இராணுவம் அவ்­வா­றான விட­யத்­துக்கு துணை­போ­காது.

இலங்­கையும் இந்­தி­யாவும் அர­சி­யலில் ஊறிப்­போன மக்­களைக்கொண்ட நாடுகள், இலங்­கையில் 1931ஆம் ஆண்­டி­லி­ருந்து வாக்கு­ரிமை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

rajithaaசுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன

பெப்­ர­வரி இரண்டாம் திகதி

நாட்டின் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோ­வையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்­ப­பிப்போம். இதனை தயா­ரிக்கும் பணிகள் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்­க­வினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.

நேற்று முன்­தினம் கூடிய அர­சாங்­கத்தின் நிறை­வேற்­றுக்­கு­ழுவில் எடுக்­கப்­பட்ட முடி­வு­களை அறி­விக்கும் முக­மா­கவே இந்த செய்­தி­யாளர் மாநாடு நடத்­தப்­பட்­டது.

அமைச்சர் ராஜித்த சேனா­ரட்ன அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் 10 நாட்­களில் பல திட்­டங்கள் எமது அர­சாங்கம் 100 நாள் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளது.

தற்­போது 10 நாட்கள் கடந்­துள்­ளன. குறு­கிய காலத்தில் பாரிய வேலைத்­திட்­டங்­களை நாங்கள் மேற்­கொள்­ள­வேண்­டி­யி­ருந்­தது. முதலில் தேர்­தலில் வெற்­றி­பெற்­றதும் அர­சாங்கம் ஒன்றை அமைத்தோம்.

அதன் பின்னர் அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கினோம். அதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை பெற்றோம். தற்­போது எங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் ஆத­ரவு அளித்­துள்­ளனர்.

உண்­மை­யான சர்­வ­கட்சி

உண்­மை­யான தேசிய சர்­வ­கட்சி அர­சாங்கம் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. தற்­போது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யை­விட அதி­க­மான பாரா­ளு­மன்ற பலம் எம்­மிடம் உள்­ளது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் எம்­முடன் உள்­ளன.

சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­ப­தி­யாக இருக்­கின்றார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­த­ம­ராக இருக்­கின்றார். இதுதான் உண்­மை­யான சர்­வ­கட்சி அர­சாங்­க­மாகும்.

நிறை­வேற்­றுக்­குழு

அந்­த­வ­கையில் செவ்­வாய்க்­கி­ழமை அர­சா­கங்த்தின் உயர்­பீ­ட­மான நிறை­வேற்­றுக்­குழுக் கூடி பல தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளது. பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய்ந்தோம். சகல கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள் இந்த தேசிய நிறை­வேற்­றுக்­கு­ழுவில் இடம்­பெ­று­கின்­றனர்.

ஆறாம் திகதி மருந்­து­கொள்கை

அதன்­படி முத­லா­வ­தாக அர­சாங்­கத்தின் தேசிய மருந்துக் கொள்­கையை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 6 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக கொள்­கைத்­திட்­டத்தை அதற்கு முன்னர் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அனு­ம­தியை பெறுவோம்.

அதன் பின்னர் அதனை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து நிறை­வேற்­றுவோம். இது தொடர்பில் நானும் ஜனா­தி­ப­தியும் நீதி­ய­மைச்­சரும் பேச்சு நடத்­தினோம்.

நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ இந்த விட­யத்தில் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டார். வாக்­கு­று­தி­ய­ளித்­த­வாறு இதனை நாங்கள் செய்­கின்றோம்.

அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோவை

பெப்­ர­வரி இரண்டாம் திகதி நாட்டின் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோ­வையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிப்போம். இலங்கை அர­சியல் வர­லாற்றில் முதற் தட­வை­யாக இவ்­வா­றான ஒரு கோவை வரு­கின்­றது.

இதனை தயா­ரிக்கும் பணிகள் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்­க­வினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனை நான் பார்த்தேன். அதனை பார்த்தால் அர­சி­யல்­வா­திகள் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக வரு­வ­தற்கு இன்­னொரு முறை சிந்­திப்­பார்கள்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற இடத்­தி­லி­ருந்து மக்கள் சேவகன் என்ற இடத்­துக்கு செல்­ல­வுள்­ளனர். இது மிக முக­கிய விட­ய­மாக அமையும். உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளி­லி­ருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வரை இது தாக்கம் செலுத்தும் வகையில் அமையும். இதற்­கான தீர்­மா­னமும் நிறை­வேற்­றுக்­கு­ழுவில் எடுக்­கப்­பட்­டது.

இரா­ணு­வத்தின் துணை­யுடன்..

கடந்த எட்டாம் திகதி இரவு அல்­லது ஒன்­பதாம் திகதி அதி­காலை நா்ட்டில் இரா­ணு­வத்தைக் கொண்டு ஆட்­சியை தக்­க­வைக்க கடந்த அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் முயற்­சித்த விடயம் குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரு­கின்­றன.

இது தொடர்பில் பல்­வேறு அதி­கா­ரிகள் சாட்­சி­ய­ம­ளித்­து­வ­ரு­கின்­றனர். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர முறைப்­பாட்­டையும் செய்­துள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி இரா­ணு­வத்தின் துணை­யைக்­கொண்டு தனது மீதி இரண்டு வரு­டங்­க­ளுக்கு பத­வியில் இருக்க முயற்­சித்­துள்ளார்.

ஆனால் இலங்­கையில் இரா­ணு­வத்தின் துணை­யைக்­கொண்டு ஆட்­சி­ய­மைப்­பது என்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும். காரணம் இரா­ணுவம் அவ்­வாறு துணை­போ­காது. இலங்­கையும் இந்­தி­யாவும் அர­சி­யலில் ஊறிப்­போன மக்­களைக் கொண்ட நாடுகள். இலங்­கையில் 1931 ஆம் ஆண்­டி­லி­ருந்து வாக்­கு­ரிமை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

அர­சி­யலில் ஊறிப்­போ­ன­வர்கள்

எமது நாட்டு மக்கள் அர­சி­யலில் ஊறிப்­போ­ன­வர்கள். எனவே இங்கு இரா­ணு­வத்தின் துணை­யுடன் ஆட்­சியை தக்க வைப்­பது முடி­யாத விட­ய­மாகும்.

இந்த சம்­ப­வத்­தின்­போதும் இரா­ணு­வத்­தினர் கடந்த அர­சாங்­கத்தின் கோரிக்­கையை ஏற்க மறுத்­துள்­ளனர். அந்த கோரிக்கையை நிரா­க­ரித்­துள்­ளனர். எனவே இந்த விடயம் தொட்ர்பில் விசேட விசா­ரணை நடத்­தப்­படும் என்­ப­தனை கூறுகின்றோம்.

ஊழல் குறித்து விசா­ரணை

ஊழல் மோச­டிகள் தொடர்பில் விரி­வான விசா­ர­ணைகள் நடத்­தப்­படும். தற்­போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை­க­கு­ழு­வுக்கு கிடைத்­துள்ள கோப்­புகள் குறித்து விசா­ரணை நடத்­தப்­படும். ,தன் தலை­வரை உட­ன­டி­யாக மாற்ற முடி­யாது. உட­ன­டி­யாக பணிப்­பாளர் நாயகம் பத­விக்கு நேர்­மை­யான ஒரு­வரை நிய­மிப்போம்.

புதிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை­க­குழு நிறு­வப்­பட்­டதும் புதிய அதி­கா­ரி­களை நிய­மிப்போம். யார் ஊழல் செய்­தி­ருந்­தாலும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அர­சாங்­கத்தில் அங்கம் வகித்­தாலும் எதிர்க்­கட்­சியில் அங்கம் வகித்­தாலு் ஊழல் விட­யத்தில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அர­சாங்க பணம்

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் தனது பெயரில் அர­சாங்­கத்தின் நிதியை வைத்­தி­ருந்­துள்ளார். இவ்­வாறு அர­சாங்­கத்தின் பணத்தை எவரும் தமது கணக்கில் வைக்க முடி­யாது. எனவே இது தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­படும். பாது­காப்பு அமைச்சு நாட்டில் ஹோட்­டல்­களை கட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அது பாது­காப்பு அமைச்சின் வேலை அல்ல.

பல ஊழல்கள்

அத­னால்தான் ராஜ­பக்ஷ குடும்பம் 69 வீத­மான அரச நிதியை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தது என்று கூறு­கின்றோம். பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சிலும் பாரிய முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ளன.

அவை தொடர்­பிலும் விசா­ர­ணைகள் நடத்­தப்­படும். ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு கடந்த அர­சாங்கம் கடன் செலுத்­த­வேண்­டி­யுள்­ள­தா­கவும் தெரி­கின்­றது.

உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ககு மோட்டார் சைக்­கிள்­களும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனவே ஊழல் மோச­டிகள் குறித்து விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­படும். இதற்­கான தீர்­மா­னமும் தேசிய நிறை­வேற்றுக் குழுவில் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சியல் கைதிகள் குறித்து துரித நட­வ­டிக்கை

அர­சியல் கைதிகள் குறித்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். கே.பி. போன்ற புலி­களின் தலை­வர்கள் சுதந்­தி­ர­மாக இருக்­கும்­போது அர­சியல் கைதிகள் எவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்க முடியும்?

எனவே தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் குறித்து அனைத்து விப­ரங்­க­ளையும் திரட்­டு­மாறு பணிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்­களின் நிலை இவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் என்­ன­வென்று ஆராய்ந்­து­விட்டு உட­னடி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

நல்லாட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பி்னர் பாலித்த தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார். இது நல்லாட்சிக்கான அரசாங்கம். எனவே தவறு செய்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் இறக்குமதிக்கு இடமளிக்கமாட்டோம். அதனுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் அறியும் சட்டமூலம்

பெப்ரவரி மாதம் ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனவே தொலைபேசி ஒட்டுக் கேட்கும் செயற்பாடுகள் இனி இடம்பெறமாட்டாது.

வௌ்ளைவான்கள் ஊடகவியலாளர்களி்ன் பின்னால் வராது.எனவே ஊடகவியலாளர்கள் அச்சமின்றி எம்மை எதிர்த்து எழுதுங்கள். ஆனால் எமது பக்க நியாயத்தை பார்த்து எழுதுங்கள்.

Share.
Leave A Reply