காலி, தடல்ல பிர­தே­சத்தின் மக­மு­தலி மாவத்­தையில் வீடொன்றில் 24 வய­தான யுவதி ஒருவர் கோடா­ரியினால் வெட்­டிப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

இச்­சம்­பவம் நேற்று அதி­காலை இடம்­பெற்­றுள்­ள­துடன் சந்­த­மாலி என்ற இளம் குடு­ம்பப் பெண் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் தாயும் சகோ­த­ரனும் கடு­மை­யான வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளான நிலையில் காலி கரா­ப்பிட்­டிய போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ள­தாக அவர்கள் மேலும் குறிப்­பிட்­டனர்.

இந்த கொலை­யினை உயி­ரி­ழந்த யுவ­தியின் மாம­னாரே செய்­துள்­ள­தா­கவும் அவர் கொலையின் பின்னர் கிங்­தோட்டை ரயில் பாலத்தில் தண்­ட­வா­ளத்தில் தலை வைத்து தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

யாழ் இரா­ணுவ முகாம் ஒன்றில் கட­மை­யாற்றும் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ருக்கும் 24 வய­தான எஸ்.ஜே. சந்­த­மா­லிக்கும் இடையில் அண்­மையில் திரு­மணம் இடம்­பெற்­றுள்­ளது.

இந் நிலையில் கண­வரின் ஊரான காலிஇதடல்லஇ மக­மு­தலி மாவத்­தையில் உள்ள வீட்டில் சந்­த­மா­லியும் அவளின் 20 வய­தான சகோ­தரன்இ 48 வய­தான தாய் ஆகியோர் சகிதம் குடி­யே­றி­யுள்­ளனர்.

இந் நிலையில் கடந்த இரண்டாம் திகதி மாலை சந்­த­மா­லியின் வீட்­டா­ருக்கும் அந்த வீட்டின் அருகே வசித்த மாம­னா­ருக்கும் இடையே சிறு பிள்ளை ஒரு­வ­ருக்கு ஏசி­யமை தொடர்பில் பிரச்­சி­னை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் நேற்று அதி­காலை கோடா­ரியுடன் சந்­த­மா­லியின் வீட்­டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்­கி­ருந்­தோரை சர­ம­ாரி­யாக வெட்டி சாய்த்­துள்ளார்.

இதன் போது சந்­த­மாலி ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­துடன் சகோ­த­ரனும் தாயும் கரா­ப்பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனும­திக்­கப்பட்­டுள்­ளனர்.

வைத்­தி­ய­சா­லியில் சிகிச்சைப் பெறும் சகோ­த­ரனின் நிலைமை கவ­லைக்­கிட­மாக உள்­ள­தாக வைத்­தி­ய­சாலைத் தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்த கோடாரித் தாக்­குதல் கொலை­யினை அடுத்து சந்­த­மா­லியின் வீட்டின் அருகே பிறி­தொரு வீட்டில் வசித்து வந்த மாமனார் கொழும்பு காலி பிர­தான ரயில் பாதையில் உள்ள கிங்­தோட்டை ரயில் பாலம் அருகே சென்றுள்ளார்.

அங்கு வைத்து தண்­ட­வா­ளத்தில் தலை­வைத்து ஓடும் ரயில் முன் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொலையாளியின் சடலத்தை நேற்று முற்பகல் காலி பொலிஸார் கிங் கங்கையிலிருந்து மீட்டமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply