புதுடெல்லி: விரும்பும் ஆண்கள் என்னை பலாத்காரம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி பெண் ஒருவர் யூடியூப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது. டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உபேர் கால்டாக்சியில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுபோன்று தொடரும் பலாத்கார சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இளம்பெண் ஒருவர் தைரியமாக களம் இறங்கி உள்ளார். அவர் செய்தது,
யூடியூப்பில் பலாத்காரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதுதான். கேட்கவே பகீர் என்று இருக்கிறதா? ஆனால், இது உண்மை. டெல்லியைச் சேர்ந்த மாதுரி தேசாய் என்பவர் இந்த வீடியோவை 3 வாரங்களுக்கு முன்பு டியூப்பில் வெளியிட்டுள்ளார்.
பெண்களை பலாத்காரம் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தும் இந்திய ஆண்களை மாதுரி கடுமையாக விமர்சித்துள்ள அந்த வீடியோ தீயாக பரவி வருகிறது.
வீடியோவில் மாதுரி கூறுகையில், வாருங்கள் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். பேருந்து நிலையம், கோயில், பஜாரில் பலாத்காரம் செய்யுங்கள்.
நான் தெருவில் தனியாக செல்கிறேன். உங்களின் கோபம், விரக்தியை பிற பெண்களிடம் காட்டுகிறீர்கள். வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்.
நான் உங்கள் டாக்சியில் வருகிறேன்; என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று தெரிவிக்கிறார். பின்னர் பலாத்கார சம்பவங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது குறித்து உருக்கமாக தெரிவித்து, அதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறுகிறார்.
ஆனால், இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் ஆண்களை அச்சமின்றி பலாத்காரம் செய்ய தூண்டும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்