கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்த இவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.
சன்னி லியோன் தமிழ் படமான ‘வடகறி’ யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் இவர் நடித்த ’ஏக் பஹேலி லீலா’ என்ற இந்தி படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பாபிகான் இயக்கியுள்ளார். இது ஒரு மறுபிறவி குறித்த படம்.
இந்த படத்தில் சன்னி பாலில் குளிப்பது போல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி ராஜஸ்தானில் குளிர் காலத்தில் எடுக்கப்பட்டது.
அதனால் 100 லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு அதில் சுடு தண்ணீர் கலந்து, சன்னி லியோன் குளிப்பது போல் படமாக்கபட்டுள்ளது. ஒரு பாடல் காட்சிக்காக இந்த குளியல் சீன் எடுக்கப்பட்டது.
இந்த பாடல் காட்சிக்காக சன்னி லியோனுக்கு சிறப்பு நடன பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த பாடல் ஐஸ்வர்யாபச்சன் மற்றும் சல்மான்கான் நடித்த ’ஹம் தில் தே சோக் சனம்‘ படத்தில் வரும் ’தோலி தேரா தோல் பாஜே…’ என்ற பாடலின் ரீ மேக் பாடலாகும்.
இந்த படம் குறித்து சன்னி லியோன் கூறுகையில், “இந்த படத்தில் எனக்கு சவாலான வேடம் கிடைத்து உள்ளது. படத்தில் எனக்கு 6 மணி நேரம் மேக் அப் செய்யப்பட்டது. கதையை படித்து பார்க்கும் போதே எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
இந்த படத்தில் வரும் லீலா வேடத்திற்காக 2 முதல் 3 மணி நேரம் செலவிட வேண்டி இருந்தது. முதல் நாள் 6 மணிநேரம் ஆனது. இந்த படத்தில் எனக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும்.
வசனம் மிக கடுமையாக உள்ளது. இருந்தாலும் நல்ல பயிற்சி எடுத்து பேசுகிறேன். இதை மக்கள் பார்த்து ரசித்தால் இதில் பட்ட சிரமம் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியாது” என்றார்.
Jodi No 1 Season 8 31-01-15 Vijay Tv Show Online