துபாய்: பணத்திற்காக உதவி மேனஜருடன் சேர்ந்து மகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் விடுத்த தாய்-மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாய் அருகில் உள்ள அஜ்மன் நாட்டில் ஒரு கம்பெனியில் உதவி மேனஜராக பணியாற்றி வரும் இந்தியர் கோபால் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவரிடம் இருந்து பணம் பறிக்க நினைத்தார் அங்குள்ள இந்தியப் பெண்ணான கீதா. அதற்காக, தனது 23 வயது மகளான ராதாவை கோபாலுடன் நெருக்கமாக பழகவிட்டுள்ளார் தாய் கீதா.
இந்நிலையில், அஜ்மனில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து அங்கு கோபாலை வரவழைத்த கீதா, கோபால் ராதாவுடன் இணைந்து இருப்பதுபோல் ஆபாசமான கோலத்தில் ரகசியமாக படம் பிடித்திருக்கிறார்.
அந்த படங்களை கோபாலிடம் காட்டி, கீதா மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
மேலும், 5 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 80 லட்சம் ரூபாய்) கொடுக்காவிட்டால் என் மகளுடன் நீ ஆபாசக் கோலத்தில் இருக்கும் படங்களை உன் முதலாளிக்கு அனுப்பி உன்னை சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த கோபால், ஒரு கட்டத்தில் கீதாவின் தொல்லையை தாங்க முடியாமல் அங்குள்ள போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
உடனே கோபாலின் புகாரின் அடிப்படையில் தாயையும், மகளையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் நேற்று ஆஜரான கீதாவும், ராதாவும், தங்களது வாக்குமூலத்தில், ”நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை” என்று நீதிபதியிடம் கூறி இருக்கின்றனர்.
தூக்கில் தொங்கி தற்கொலை செய்த கல்லூரி மாணவி…. பலவீனமானவங்க பார்க்காதீாகள்- (வீடியோ)