பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் ஏழு கோடி ரூபா பெறுமதியான கைக் கடிகாரங்கள் உள்ளதாக இணையத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தன்னிடம் அவ்வாற கைக் கடிகாரங்கள் இல்லையென நாமல் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தன்னிடம் விலைமதிப்பு கூடிய கைக் கடிகாரங்கள் ஒன்றும் இல்லை. எனக்கு பரிசாக கிடைத்து இரண்டு மூன்று கடிகாரங்களே உள்ளன என மறுப்பு வெளியிட்டுள்ளார்.
எனினும் கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ஷ கட்டியிருந்த கடிகாரங்களும் அவற்றின் விலைப் பட்டியலும் தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.