முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

யோசித்த ராஜபக்ச நேற்று இரவு டுபாய் நோக்கி சென்ற விமானத்தில் இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் யோசித்த விசேட போக்குவரத்து சேவைகள் இன்றி சதாரண போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளம் ஓட்டுவதற்கு யோஷித்தவிற்கு 5 கோடியை செலவிட்ட கடற்படை!

yoபொல்கொட ஆற்றில் வள்ளம் ஓட்டுவதற்கு யோஷித்த ராஜபகஷவிற்காக ஐந்து கோடியை கடற்படை செலவிட்டுள்ளது. யோஷித்த ராஜபக்ஷவின் வள்ளம் ஓட்டும் ஆசையை நிறைவு செய்வதற்காக பொல்கொட ஆற்றை அண்டிய சதுப்பு நில பகுதியை நிறைத்து செப்பனிடுவதற்காக இப்பகுதி காணிகளை கடற்படை மக்களிடமிருந்து வாங்கியிருக்கிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி எட்டு (8) காணி உாிமையாளா்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக 38வது சரத்தில் அடிப்படையில் 2011/09/27 திகதியிட்ட , 1725\10 இலக்க அரச வா்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் பெறப்பட்டிருக்கின்றன.

இதற்கான 50,400, 000.00 (ஐந்து கோடி 4 இலட்சம் ரூபா பணம் காணி உாிமையாளா்கள் எட்டு பேருக்கு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2013.03.07 அன்று இதற்கான பணத்தை காணி அமைச்சு பிரதேச செயலகத்திலத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த சதுப்பு நிலம் , வன பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான நிலமான காரணத்தால் சூழல் அதிகார சபையின் எதிா்ப்பின் காரணமாகவும் இந்த வேலைத்திட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

2015 வரை பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக இந்த பகுதி இருந்தள்ளது. பல கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த வள்ளங்கள் இப்பகுதியில் இன்றும் கேட்பாா் பாா்ப்பாாின்றி கிடப்பதாக அறிய வருகிறது.

Share.
Leave A Reply