ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை அரசாங்கம் நாடியுள்ளது.

அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ, கடந்த 11ஆம் திகதி தன்னுடைய மனைவியான புஸ்பா ராஜபக்ஷவுடன் நாட்டைவிட்டு வெளியேறினார்.

அவர், அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் தற்போது வசித்துவருகின்றார்.

அவருக்கு எதிராக கடும் நிதி மோசடிகுற்றச்சாட்டு இருப்பதாக அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பாரிய நிதிமோசடிகளில் அவர் ஈடுபட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share.
Leave A Reply