ஆசி­யாவின் அழ­கிய தீவாக இருக்கும் இலங்­கையின் தன்­னி­ கரற்ற கன­வான்­களைக் கொண்­டி ருக்கும் கிரிக்கெட் அணியே கிண் ­ணத்தை வெற்­றி­வாகை சூட­ வேண்டும் என உள்­நாட்டில் மட்­டு­மல்­லாது உல­க­மெங்கும் பரந்து வாழும் அனைத்து இலங்­கை­ய ர்­களும் விரும்­பு­கின்­றார்கள்.

உலக கிண்­ணத்தை வென்­றெ­டுத்து விட் டால் உல­கத்­தையே வென்று­விட்ட­தைப்­போன்­ற­தொரு பெரு­ மிதம். இது எமக்கு மட்­டு­மல்ல உலக கிண்­ணத்தில் பங்­கெ­டுக்கும் அனைத்து நாடு­களில் வாழும் மக்­களின் எண்­ணப்­பாடும் இது­வா­கவே இருக்கின்­றது. கிரிக்­கெட்டின் மீது அத்­தனை பற்­று­றுதி. இதில் இலங்­கை­யர்கள் விதி­வி­லக்­கல்ல.

அந்­நி­லையில் எம்­ம­வர்­களின் மீதா­ன­தொரு விரி­வான பார்வை செலுத்­த­வேண்­டி­யுள்­ளது.

அறி­மு­கமும் வர­லாறும்

1975ஆம் ஆண்டு முத­லா­வது உலக கிண்­ணத்தில் டெஸ்ட் அந்­தஸ்தைப் பெறாத நிலையில் காணப்­பட்ட இலங்­கை­யானது மேற்­கிந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்­றி­ருந்த குழு ”பி” இல் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது. இத்தொ­ட ரில்  குழு நிலையில் நடை­பெற்ற மூன்று போட்­டி­க­ளிலும் தோல்­வி­யுற்று வெளியே­றி­யது.

அதனைத் தொடர்ந்து 1979ஆம் ஆண்டும் குழு ”பி”இல் இடம்­பெற்­றி­ருந்த இலங்கை முதற்­சுற்­றோடு வெளியே­றி­யது. எனினும் இத் ­தொ­டரில் இங்­கி­லாந்தின் மன்­செஸ்­டரில் இடம்­பெற்ற இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் வெற்றி பெற்று உலக கிண்­ணத்­தொ­டரில் தனது முதல் வெற்­றியை இலங்கை பதிவு செய்­தது.

அதற்­க­டுத்­த­தாக 1983இல் குழு ”ஏ” இல் கள­மி­றங்­கிய இலங்கை போர­ாடிய போதும் ஆறு போட்­டி­களில் ஒன்றில் மட்­டுமே வெற்றி பெற்­றி­ருந்­ததால் முதற்­சுற்­றுடன் வெளியே­ற­வேண்­டி­யி­ருந்­தது.

தொடர்ந்து 1987இல் எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் உலக கிண்ணத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை குழு ”பி” இல் இடம்­பெற்­றி­ருந்­தது. 6 முதற்­சுற்று ஆட்­டங்­களில் கலந்து கொண்ட இலங்கை அனைத்­தி லும் தோல்­வி­யுற்று மீண்­டு­மொ­ரு­ த­டவை முதற்­சுற்­றுடன் வெளி யே­றி­யது.

அதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு உலக கிண்­ணத் தில் அர­விந்த டி சில்வா தலை­மை யில் சென்­றி­ருந்த இலங்கை எட்டு போட்­டி­களில் பங்­கெ­டு த்து இரண்டு போட்­டி­களில் மட்­டுமே வெற்றி பெற்று எட்­டா­வது இடத்தை தக்­க­வைத்­துக்­கொண் ­டது.

1996 இல் தடம்­ப­தித்த இலங்கை

இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகள் கூட்­டாக இணைந்து நடத்­திய இத்­தொ­டரில் வில்ஸ் கிண்ணம் என அழைக்­கப்­பட்ட உலக கிண்­ணத்தை கைப்­ பற்­று­வ­தற்­காக அர்­ஜுன ரண­து ங்க தலை­மை­யி­லான இலங்கை குழாமில் அரவிந்த.டி.சில்வா (உப தலைவர்), ரொஷான் மகா­நாம, சனத் ஜய­சூ­ரிய, அசங்­க­ கு­ரு­சிங்க, ஹஷான்­ தி­ல­க­ரட்ன, ரொமேஷ் களு­வி­த்தாரன, குமார் ­தர்­ம­சேன, சமிந்­த வாஸ், பிர­மோ­த­ய ­விக்­கி­ர­ம­சிங்க, முத்­தையா முர­ளி­தரன், ரவீந்­தி­ர ­புஷ்­ப­கு­மார, மாவன் அத்­த­பத்து, உபுல் ­சந்­த­ன­ ஆ­கியோர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

துலிப் மெண்டிஸ் அணியின் முகா­மை­யா­ள­ரா­கவும் பயிற்­சி­யா­ள­ராக டேவிட் வட்­மோரும் செயற்­பட்­டி­ருந்­தமை விசே­ட­மா­ன­தாகும்.

1996 இல் உலகக் கிண்­ணத்­திற்கு முன்­ன­தாக இடம்­பெற்ற ஒரு நாள் தொடர்­களில் ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கை மீது இம்­முறை உலக்­கிண்­ணத்தை கைப்­பற்­று­வ­தற்கு அதிக வாய்ப்­புக்கள் இல்­லா விட்­டாலும் அரை­யி­று­தி­வ­ரை­யி­லா­வது செல்லும் என்ற ஆரு­டங் கள் கூறப்­பட்டு வந்­தது.

இந்­நி­லையில் குழு ”ஏ”யில்­ இ­லங்கை இடம்­பெற்­றி­ருந்­தது. முத­லா­வது கால் இறுதிப் போட்­டியில் இங்­கி­லாந்தைச் சந்­தித்த இலங்கை அவ்­வ­ணியை ஐந்து விக்­கட்­டுக்­க­ளினால் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்குள் முதற்­த­ட­வை­யாக நுழைந்­தது.

முத­லா­வது அரை­யி­று­திப்­போட்டி இலங்கை, இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் ஈடன் கார்டன் மைதா­னத்தில் நடை­பெற்­றது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை எட்டு விக்­கட்­டுக்­களை இழந்து 251 ஓட்­டங்­களைப் பெற்­றது.

பதி­லுக்கு இந்­தியா 34.1 ஓவர்­களில் எட்டு விக்கட் இழப்­பிற்கு 120 ஓட்­டத்­ தி­னையே பெற்­றது. இப்­போட்­டியில் இலங்கை அணி 130 ஓட்­டங்­க­ளினால் வெற்­றி­பெற்று முதற்­த­ட­வை­யாக இறு­திப்­போட்­டிக்குத் தெரி­வா­னது.

பலம்­பொ­ருந்­திய அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான தீர்க்­க­மான இறு­திப்­போட்டி பா­கிஸ்தான் லாகூர் நகரில் அமைந்­துள்ள கடாபி ஸ்டேடி­யத்தில் பகல் – இரவு ஆட்­ட­மாக நடை­பெற்­றது.

நாணயச் சுழற்­சியில் வெற்­றி­ பெற்ற பெற்ற இலங்கை அணித்­த­லைவர் அர்­ஜுன அவுஸ்­தி­ரே­லிய அணி­யினை முதலில் துடுப்­பெடுத்தாடும்படி பணித்­தார்.

கடந்த ஐந்து உலகக் கிண்ண இறுதிப் போட்­டி­க­ளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்­றி­பெற்­றி­ருந்­தது. அத்­துடன் இரவு பகல் ஆட்டம் வேறு.

இந்­நி­லையில் நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்­த­லைவர் அர்­ஜு­னவின் தீர்­மானம் குறித்த பலத்த வினா­வெ­ழுந்­த­து டன் அதி­க­மாவும் பேசப்­பட்­டது.

அந்­நி­லையில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா 50 ஓவர்­களில் 241 ஓட்­டங்­களைப் பெற்­றது. மார்க்­ டெ­யிலர் 74 ஓட்­டங்­க­ளையும், ரிக்­கி­பொண்டிங் 43 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். பந்­து­வீச்சில் அர­விந்த டி சில்வா 42 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்கட்­டுக்­களைக் கைப்­பற்­றினார்.

242 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக கொண்ட இலங்கை தமது பதில் துடுப்­பாட்­டத்தை ஆரம்­பித்­தது. போட்டி ஆரம்­பித்து 6 ஓவ ர்கள் முடி­வ­தற்கு முன்­பாக தமது ஆரம்ப அதி­ரடி துடுப்­பாட்ட வீரர்கள் இரு­வ­ரையும் இலங்கை இழந்­தது.

சனத் ஜய­சூரிய 7 பந்­து க­ளுக்கு முகங்­கொ­டுத்து 9 ஓட்­டங்­க­ளு­டனும், களு­வித்­த­ாரண 13 பந்­து­க­ளுக்கு முகங்­கொ­டுத்து 6 ஓட்டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்­தனர். 2வது விக்­கட்டை இழக்­கும்­போது அணி 23 ஓட்­டங்­க­ளையே பெற்­றி­ ருந்­தது.

இருப்­பினும் அசங்க குரு­சிங்க, அர­விந்த டி சில்வா இரு­வரும் அணியின் ஓட்ட எண்­ணிக்­கை­யினை 148 வரை அதி­க­ரித்­தனர். 31ஆவது ஓவரில் குரு­சிங்க ஆட்­ட­மி­ழந்­தார்.

இதைத் தொடர்ந்து அர்­ஜுன, அர­விந்த வெற்றி இலக்கை 46.2ஆவது ஓவரில் அடைந்­தனர். 1996 வில்ஸ் உலகக் கிண்ணத்தை 7 விக்­கட்­டுக்­க­ளினால் வெற்­றி­பெற்ற இலங்கை 7ஆவது உலக கிண்­ணத்தை தன்­வ­சப்­ப­டுத்­தி­யது.

இறுதிப் போட்­டியின் ஆட்ட­நா­ய­க­னாக ஆட்­ட­மி­ழக்­காது 107 ஓட்­டங்­களைப் பெற்ற அர­விந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். போட்­டித்­தொ­டரின் சிறப்­பாட்­டக்­கா­ர­ராக சனத் ஜய­சூ­ரிய தெரிவு செய்­யப்­பட்டார்.

இறு­திப்­போட்­டியில் நடு­வர்­க­ளாக ஸ்டீவ் பக்னர் (மேற்­கிந்­தியா) டேவிட் செப்பல் (இங்­கி­லாந்து) ஆகி­யோரும், 3ஆவது நடுவராக தென்­னா­பி­ரிக்­காவைச் சேர்ந்த கிரில் மிச்­சியும் கடமை புரிந்­தனர்.

போட்டி மத்­தி­யஸ்­த­ராக (இறுதித் தீர்­மா­னத்­துக்­கு­ரிய அதி­காரம் பெற்­ற­வ­ராக) கிளைவ் லொயிட் (மே.இந்­தியா) கடமையாற்றி­யி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த வர­லாற்று சாத­னையை நிகழ்த்­திய இலங்கை 1999ஆம் ஆண்டு உலக கிண்­ணத்­தொ­டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும் முதற்­சுற்­று­டனே வெளியே­றி­யி­ருந்­தது.

தொடர்ந்து ஆபி­ரிக்க கண்­­டத்தில் முதற்­த­ட­வை­யாக 2003இல் நடை­பெற்ற 8 ஆவது உலகக் கிண்­ணத்­தொ­டரில் அரையிறுதிவரை சென்­றி­ருந்த இல ங்கை அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் டக்­வேர்த்­ லூயிஸ் முறையில் தோல்­வி­யுற்று வெளியேறி­யி­ருந்­தது.

தொடர்ச்­சி­யாக இரண்டு ஏமாற்­றங்கள்

showImageInStory2007ஆம் ஆண்டு மேற்­கிந்­தி­யா வில் நடை­பெற்ற 9ஆவது உலக கிண்­ணத்­தொ­டரில் குழு ”பி” இல் இடம்­பெற்ற மஹேல ஜயவர்த்­தன தலை­மை­யி­லான இலங்கை முதற்­சுற்றில் அனைத்­துப்­போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்­றி­ருந்தது.

அரை இறு­தியில் நியூ­ஸி­லாந்தை 81ஓட்­டங்­களால் வெற்றி பெற்ற இலங்கை இறு­திப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சந்­தித்­தது.

1996இல் இலங்­கை­யிடம்  கிண்­ணத்தைப் பறி­கொ­டுத்­தி­ருந்த அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர் அடம்­ கில்­கிறிஸ்ட் (149 ஓட்­டங்கள்) அபார துடுப்­பாட்­டத்­தாண்­டவம் இலங்­கையின் உலகக் கிண்­ணக்­க­னவை சித­ற­டையச் ­செய்­ய­தது, இறுதியில் அவுஸ்­தி­ரே­லியா டக்­வோர்த்­ லூ யிஸ் முறையில் 53ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. இதனால் மீண்­டு­மொரு தடவை உலகக் கிண்­ண த்தைக் கைப்­பற்றும் இலக்கு தவ­றிப்­போ­னது.

அடுத்து 2011இல் இந்­திய, இலங்கை, பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் கூட்­டாக இணைந்து நடத்­திய 10ஆவது உலக கிண்ணத்தில் குழு ”ஏ” இல் இடம்­பெற்­றி­ருந்த குமார் சங்­க­க்கார தலை­மை­யி­லான இலங்கை குழு நிலையில் நான்கு வெற்றி­க­ளுடன் மீண்­டு­மொரு தட வை நியூ­ஸி­லாந்தை அரை இறு­தியில் சந்­தித்து ஐந்து விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்றது.

இறு­திப்­போட்­டியில் போட்­டி யை நடத்­திய நாடு­களில் ஒன்­றான இந்­திய அணியை அதன் சொந்த மண்ணில் இலங்கை சந்தித்­தது. இப்­போட்டியில் இலங்­கையின் கிண்ண இலக்கை இறு­தி­நே­ரத்தில் அதி­ர­டி­யாக துடுப்­பெ­டுத்­தாடி 91 ஓட்­டங்­களைப் பெற்ற இந்­தியா அணித்­த­லைவர் டோனி சித­ற­டித் தார்.

ஆறு விக்கெட் வித்­தி­யா­சத் தில் இலங்­கையை வீழ்த்­திய இந்­திய 28ஆண்­டு­க­ளுக்கு பின்னர் மீண்டும் உலகக் கிண்­ணத்தைக் கைப்­பற்றி சாதிக்க இலங்­கைக்கு இரண்­டா­வது தட­வை­யா­கவும் உலகக் கிண்­ணத்தை இழந்த ஏமா ற்றம்.

ஆஸி.கண்­டத்தில் சாதிக்க காத்­தி­ருக்கும் சிங்­கங்கள்

இவ்­வா­றான வர­லாற்று தடங்­க­ளுடன் இம்­முறை அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள 11ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி பங்­கேற்­கின்­றது.

அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, இங்­கி­லாந்து போன்ற பல­மான அணி­களும் பங்­க­ளாதேஷ், ஸ்கொட்­லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற திடீர் அதிர்ச்­சி­களை வழங்கும் அணி­களும் பங்­கேற்­றுள்ள குழு ”ஏ” இல் இல ங்கை இடம்­பெற்றுள்ளது.

அஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை யில் தில­க­ரட்ன டில்ஷான், குமார் சங்­கக்­கார, மஹேல ஜெய­வர்த்­தன, லஹிரு திரி­மன்னே, தினேஷ் சந்­திமல், திமுத் கரு­ணா­ரட்ன, ஜீவன் மெண்டிஸ், திஸர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மலிங்க, துஷ்­மந்த சமீர, நுவான் குல­சே­கர, ரங்­கன ஹேரத், சசித்ர சேன­நாயக்க ஆகியோர் மீண்டும் தாய்­நாட்­டுக்கு உலகக் கிண்­ணத்தைக் கொண்­டு­வ­ரு­தற்­காக களங்­களில் போரா­ட­வுள்­ளனர்.

showImageInStoryபலமும் பல­வீ­னமும்

தமது இறுதி உலகக் கிண்­ணத்­தொ­டரில் பங்­கேற்­றுள்ள குமார் சங்­க­க்கார மற்றும் மஹேல ஜெய­வர்த்­தன ஆகி­யோரின் அனுபவம் இலங்­கைக்கு மிகப்­பெ­ரும்­பலம். அணித்­த­லை­வர்­க­ளாக, துடுப்­பாட்­ட­வீ­ரர்­க­ளாக இவர்­களின் அனு­பவமும் நுணுக்கங்களும் இலங் ­கையின் வெற்­றி­க­ளுக்க ஆணி­வே­ராக அமையும்.

அதே­போன்று மற்­று­மொரு அனு­ப­வ­ வீ­ர­ரான திலக­ரட்ன டில்­ஷானின் அதி­ரடி ஆரம்ப துடுப்­பாட்டம், களத்­த­டுப்பு, பந்­து­வீச்சு ஆகி­ய­னவும் இலங்­கையின் வெற்­றியில் ஆதிக்கம் செலு­த்த­வுள்­ளன.

குறிப்­பாக இம்­மூன்று வீரர்­களும் முன்­வ­ரி­சையில் கள­மி­றங்­கு­வதால் எதி­ர­ணி­க­ளுக்கு பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். அதே­நேரம் மத்­தி­ய­வ­ரிசை துடுப்­பாட்­டத்தை முழு­மை­யாக அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தி­யூஸே சுமந்துகொண்டிருக்கின்றார்.

குறிப்­பாக தினேஷ் சந்­திமல், திமுத் கரு­ணா­ரட்ன, ஆரம்­ப­த் து­டுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­காத பட்­சத்தில் லகிரு திரி­மன்னே ஆகியோர் மத்­திய வரி­சையில் வெளிப்­ப­டுத்தும் பிர­கா­சிப்­புக்கள் போது­மா­ன­தாக இல்­லை­யென்றே கூற­வேண்­டி­யுள்­ளது. ஆகவே நிச்­ச­ய­மாக இவ் இளைய வீரர்­களின் துடுப்­பாட்ட எழுச்சி மிக­மிக அவ­­சர­மான அவ­சி­ய­மா­கின்­றது.

சகல­துறை வீரர்­க­ளான திஸ­ர­ பெ­ரேரா, ஜீவன் மெண்டிஸ் சசித்ர சேன­நா­யக்க ஆகியோர் அதி­ர­டித்­து­டுப்­பாட்­டத்தில் பிரகாசிக்கும் பட்­சத்தில்   இலங்கை போட்­டி­களை   சிறப்­பான முறையில்  முடிவு செய்­வ­தற்கு ஏது­வா­ன­தாக இருக்கும்.

அதே­போன்று அவர்கள் கூடு­த­லான விக்­கெட்­டுக்­களை கைப்­பற்­று­வ­திலும் அதிக கவனம் எடுக்கும் பட்­சத்தில் இலங்­கையின் பந்­து­வீச்சுப் பகுதி மேலு­மொ­ரு­படி வலு­வ­டையும்.

ஆஸி. மற்றும் நியூ. ஆகி­ய­வற் றின் ஆடு­க­ளங்கள் சுழல்­பந்து வீச்­சுக்கு சாத­க­மாக காணப்­ப­டாத போதும் இட­துகை சுழல்­பந்து வீச்­சா­ளர்­க­ளுக்கும் லெக்ஸ்பின் சுழல் பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்கும் கைகொ­டுப்­பதாய் உள்­ளது.

குறிப்­பாக இவர்­களால் விக்­கெட்­டுக்­களை வீழ்த்­த­மு­டி­யாது போனாலும் ஓட்­டங்­களை கட்­டு ப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய வகையில் பந்­து­வீ­சு­வ­தற்கு இவ் ஆடு­க­ளங்­க ளில் ஏது நிலைகள் காணப்­ப­டு­கின்­றன.

அதன் அடிப்­ப­டையில் இலங்கை குழாமில் இடது கை அனு­பவ சுழல்­பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் அதே­போன்று லெக் ஸ்­பின்னர் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் இடம்­பெற்­றி­ருக்­கின்­றா ர்கள்.

உல­கத்­தையே ஆட்­டி­வைத்த அபார வேகப்­பந்­து­வீச்­சாளர் லசித் மலிங்க மீண்டும் அணிக்கு திரும்­பி­யி­ருப்­பது இலங்­கையின் பந்­து­வீச்சுக்கு கூடுதல் பல­மா­கின்­றது.

அத்­துடன் அனு­பவ வீரர் நுவான் குல­சே­க­ரவின் நுணுக்­க­மான ஸ்விங் முறைப் பந்­து­வீச்சும் அணிக்கு பெரிதும் கைகொ­டுக்­க­ வுள்­ளது. குறிப்­பாக வேகப்­பந்து வீச்­சா­ளர்­களின் சொர்க்­க­பு­ரி­யா­கவி­ருக்கும் அவுஸ்­தி­ரே­லிய நியூ­ஸி­லாந்து ஆடு­க­ளங்­களில் இவர்கள் நிச்­சய­மாக ஆதிக்­கம் ­செ­லுத்­து­வார்கள்.

மேலும் இளம்­   வீ­ரர்­க­ளான சுரங்க லக்மால், துஷ்­மந்த சமீர ஆகி­யோரும்  புதிய மாற்­றத்தை துடிப்­புடன் வெளிப்­ப­டு த்தும் பட்சத்தில் இலங்­கையின் பந்­து­வீச்சு எதி­ர­ணிக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும். மேலும் நியூ­ஸி­ லாந்தின் மிகச்­சி­றிய ஆடுகளங்களில் வெற்றி என்­பது பந்து வீச்­சா­ளர்­களின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

Catches Win Matches எனக்­கூ­று­வார்கள். கடந்த உலகக் கிண்ண இறு­தி­யாட்­டத்தில் மூன்று பிடிகளை தவற விட்டமையால் கிண்ணக்கனவு தகர்ந்தது என்பதால் அதன் பெறுமதியை இலங்கை நன்கு அறியும்.

அத்துடன் இலங்கையின் களத்தடுப்பு சிறப்பாக காணப்படுவதுடன் டில்ஷான், திஸர, திரிமன்னே, மஹேல உட்பட ஏனைய வீரர்களும் சோர் வடையாது அப்பணியை தொடரவேண்டியது கட்டா யமாகின்றது. அதேபோன்று மிகப்பெரிய மைதானங்களைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் எல்லைக்கோடு வரை களத் தடுப் பாளர்களின் போராட்டம் மிக அத்தியாவசியமாகின்றது.

நம்பிக்கை

உலக கிண்ணத்தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து மண்ணில் அவ்வணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பெற்றுக் கொண்ட படிப்பினைகள் இலங்கைக்கு பெரிதும் உதவுவதாக இருக்கும்.

பச்சைப்புற்றரை ஆடுகளங்களில் சவால்களுக்கு மத்தியிலான துடு ப்பாட்டம், நுணுக்கமான பந்து வீச்சு என்பவற்றை இலங்கை தற்போது நன்கறிந்துள்ளது.

இதனால் அவ்வாடு களங்களுக்கேற்ற வகையிலான மாற்றங்களுடன் பிரகாசிப்பதற்கு தயாராகவே இலங்கை உள்ளது. குறிப்பாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2–-4 என தோல்வி பயிற்சி ஆட்டத்தில் சிம்பாப்வேக்கு எதிரான பயிற்சி ஆட்ட தோல்வி என்பனவற்றின் அடிப்படையில் மட்டும் இலங் கையின் பலத்தை குறைத்து மதிப் படுவது சாலப்பொருத்தமான தொன்றல்ல.

19 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக கிண்ணத்தை தாயகத்திற்கு பெற்றுக்கொடுக்கும் கனவை நனவாக்குவதற்காக அவுஸ்திரேலிய கண்டத்தின் ஆடுகளங்களில் சிங்கங்களின் கர்ஜனை உச்சமானதாக இருக்கும் என நம்புவோம்.

இலங்கையர் சார்பில் தன்னிகரற்ற கனவான் களை கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரி விப்பதுடன் வெற்றிக்காக எல்லோ ருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக.

Share.
Leave A Reply