நியூயார்க்: செல்போன்களின் மூலம் தங்களை தாங்களே போட்டோ எடுக்கும் ‘செல்பி முறை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவும் செல்பியை எடுத்துள்ளார்.

ஏவியேட்டர் கூலிங் க்ளாஸுடன் கண்ணாடியில்  வெவ்வேறு முகபாவனையுடனும், செல்பி ஸ்டிக்குடன் தன்னைத்தானே படம் பிடித்துக்கொள்ளும்  அதிபர்  ஒபாமாவின்  வீடியோ  அமெரிக்காவில்  வைரலாக  பரவி வருகிறது.

சாதாரண மனிதர்கள் கண்ணாடி முன்னும், செல்பி எடுக்கவும் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படியே ஒபாமாவும் செய்து அதை வீடியோவாக பேஸ்புக் மற்றும் யூடியுபில் வெளியிட்டுள்ளார்கள்.

வியாழக்கிழமை வெளியான இந்த வீடியோவை ஒரே நாளில் 15 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோவில் ஏவியேட்டர் கூலிங்க்ளாஸுடன் வெவ்வேறு வித முகபாவனைகளைக் காட்டும் ஒபாமா, செல்பி ஸ்டிக்குடன் தன்னைத் தானே படம் எடுக்கிறார்.

மிசல் ஒபாமாவை பென்சில் ட்ராயிங்கில் வரைந்து தனக்குத்தானே ‘ நன்றாக இருக்கிறது’ என்று சொல்கிறார்.

ஒபாமா கேர் திட்டத்திற்கு பதிவு செய்ய இறுதி நாளை நினைவு படுத்துவதற்கான ஒத்திகை பார்ப்பது போல் ‘ பிப்ரவரி’ என்பதை திணறித் திணறி சொல்லிப் பார்க்கிறார்.

கடைசியில் அவரது உதவியாளர் இவருடைய கூடைப்பந்து போஸை பார்த்து வியப்பாக சொல்லும் போது ‘என்னையும் என் வாழ்கையை வாழ விடுங்களேன்’ என்று கூறுகிறார். அல்டிமேட்டாக ‘ “YOLO  என்று அதாவது you only live once என்று கூறி முடிக்கிறார்.

அமெரிக்காவின் இந்த செல்பி வீடியோவை கண்டு எதிர்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply