உலகக் கிண்ணத் தொடரில் 6ஆவது முறையாக இந்தியாவிடம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கராச்சி நகரில் ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பை ஆர்வமாகப் பார்த்த ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ஆத்திரமடைந்து திரைகளை கிழித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் பல வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகளை வீதிகளில் வைத்து உடைந்து நொறுக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.