இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அணிந்த அவரது பெயர் பொறித்த கோட் சுமார் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.
ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தரான, ராஜேஷ் ஜுனேஜா என்பவர் இந்த கோட்டை சூரத்தில் நடந்த ஏலமொன்றில் எடுத்தார்.
இந்தக் கோட்டை நரேந்திர மோடி உருவச்சிலை ஒன்றிஉன் அருகே வைத்து அந்தச் சிலையுடன் தினசரி பேசுவதன் மூலம் உத்வேகம் பெறப்போவதாக ராஜேஷ் ஜுனேஜா கூறியிருக்கிறார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, மோடி தனது பெயர் கோடுகளாகப் பின்னிப் பொறிக்கப்பட்டு விசேஷமாகத் தைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டை அணிந்திருந்தார்.
இந்த சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான கோட்டை மோடி அணிந்தது கடுமையான விமர்சன்ங்களுக்கு உள்ளானது.
ஆனால் இப்போது இந்த கோட்டை ஏலத்தில் விற்று கிடைத்த தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டச் செலவுக்குப் பயன்படுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் பிரதமர் மோடி முக்கியமாக கருதும் ஒரு திட்டம். இது மூன்றாண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.