குடி­போதை கார­ண­மாக ஒருவர் தன் மனை­வியை கோட­ரியால் வெட்டி கொலை செய்து விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ள சம்­பவம் புதுக்­கோட்­டையில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

புதுக்­கோட்டை மாவட்டம், கீர­மங்­கலம் அருகில் உள்ள பனங்­குளம் வடக்கு கிரா­மத்தைச் சேர்ந்த சண்­முகம் என்ற விவசாயியே (68வயது) தனது மனைவி சகுந்­த­லாவை (60வயது) கோட­ரியால் வெட்டி கொலை செய்­துள்ளார்.

சண்­முகம் சகுந்­தலா தம்­ப­தி­யி­ன­ருக்கு கிருஷ்­ண­மூர்த்தி (40வயது ) என்ற மகனும் 3 மகள்மாரும் உள்­ளனர். அனைவருக்கும் திரு­மணம் நடை­பெற்­று­விட்­டது. மகன் கிருஷ்­ண­மூர்த்­தியும் தனி­கு­டித்­தனம் போய்­விட்டார்.

பனங்­கு­ளத்தில் சண்­மு­கமும் சகுந்­த­லாவும் மட்­டுமே வசித்து வந்­துள்­ளனர். இந்­நி­லையில் அடிக்­கடி மது போதையில் வரும் சண்­முகம் மனை­வி­யிடம் சண்டை போடு­வது வழக்­க­மாக இருந்­துள்­ளது.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்பு கணவன் மனை­விக்­கி­டையே சண்டை ஏற்பட்டதால் மனைவி கழுத்தில் இருந்த தாலியை சண்­முகம் அறுத்து வீசி­யுள்ளார்.

இந்த தகவல் அறிந்த மகன் கிருஷ்­ண­மூர்த்தி மற்றும் உற­வி­னர்கள் சண்­மு­கத்­திடம் தட்­டிக்­கேட்­டுள்­ளனர். அதன் பிறகும் தொடர்ந்து மனைவி சகுந்­த­லா­விடம் குடி­போ­தையில் சண்டை போட்­டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்­தினம் அதி­காலை வீட்டில் தூங்கிக் கொண்­டி­ருந்த சகுந்­த­லாவை குடி­போ­தையில் இருந்த கணவர் சண்­முகம் அருகில் கிடந்த கோட­ரியால் பின்­தலை மற்றும் கழுத்து பகு­தியில் ஆழ­மாக வெட்­டி­யுள்ளார்.

இதனால் சம்­பவ இடத்­தி­லேயே சகுந்­தலா பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.

பின்னர் அதி­காலை அந்த பகு­தியில் தோட்­டத்­திற்கு வந்­த­வர்கள் 7 மணிக்கு மேலும், வீட்­டிற்குள் சகுந்­தலா தூங்கிக் கொண்டி­ருப்­ப­தாக நினைத்து எழுப்ப அருகில் சென்று பார்த்­துள்­ளனர்.

அதன்­போது அவர் படுக்­கை­யி­லேயே சட­ல­மாக கிடந்­­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து கீர­மங்­கலம் பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதற்குள் சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

கீரமங்கலம் பொலிஸார் தப்பி ஓடிய சண்முகத்தை தேடி வருவதோடு தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply