காணாமல் போனவர்களின் உறவினர்களை பயன்படுத்தி, சுமந்திரனுக்கு எதிராக ‘சுரேஷ் பிரேமசந்திரன், அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி” யின்னர் தலைமையில் யாழில் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும், ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடாமல் மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது.
(குறிப்பாக… (குறிப்பாக… “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின்னர் நீண்டகாலமாக காணாமல் போனவர்களின் உறவினர்களை வைத்துக்கொண்டுதான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு காலத்துக்கு தான் இந்த பாவப்பட்ட சனங்களை அழவைத்து, அழைத்துக்கொண்டு திரிய போகின்றார்களோ தெரியவில்லை??)
யாழ். பஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டம் 11.00 மணிவரை அவ்விடத்திலேயே இடம்பெற்றது.
இதனையடுத்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக சத்திரசந்தியை அடைந்து, பின் காங்கேசன்துறை வீதி வழியாக உலக தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடம் முன்பாக சென்று தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தின் இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பா.கஜதீபன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான சி.பாஸ்கரா, தி.நிரோஷ் மற்றும் பிரேதசசபை உறுப்பினர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர். (சிறிதரன் எம்.பி இப்பேரணியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தமைக்கு காரணம் என்ன?)
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில்…. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவியை ஏன் எரித்தார்கள்?
ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு சுமந்திரனா காரணம்? ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போட்டமையானது அமெரிக்கா எடுத்த முடிவாகும்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்தபோதே… “ஐ.நா. விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு இது பொருத்தமான தருணமல்ல என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
அப்படியானால்… நிஷா பிஸ்வால் அல்லது ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் கொடும்பாவியை அல்லவா எரித்திருக்கவேண்டும்??
இது சுமந்திரனுக்கு, சம்பந்தனுக்கு எதிரான போராட்டமே தவிர, துன்பத்தில் மூழ்கி தவிக்கும் மக்களின் துயரத்தை துடைப்பதற்கான போராட்டமல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழரசுக் கட்சியானது .. ′தாங்கள் மட்டுமே தமிழர்களின் “ஏக பிரதிநிதி” களாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும்.
அல்லாது போனால்….., தமிழர்கள் வெகுவிரைவில் ′தமிழரசுக் கட்சி’யினருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்குரிய நிலைமை படிப்படியாக தோன்றும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.