ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட வலியுறுத்தியும், படையினரின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பெரியளவிலான அமைதிப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

jaffna-demo-1
இன்று காலை 10 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அமைதிப் பேரணி ஆரம்பித்தது.

யாழ்.பல்லைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர், அ. இராசகுமாரன், மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க இந்தப் பேரணி, இடம்பெற்று வருகிறது.

jaffna-demo-3இராமநாதன் வீதி, பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி வழியாக, நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியை இந்தப் பேரணி சென்றடையும்.

அங்கு அமைப்புக்குழுவின் தலைவரின் உரை, மனுக் கையளிப்புடன் இந்த அமைதிப் பேரணி நிறைவடையும்.

150224093737_jaffna_protest_624x351_bbc_nocredit

இந்தப் பேரணியில், ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

jaffna-demo-2

யாழ்ப்பாணத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ்மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்டுள்ள அரசியல் சார்பற்ற முதலாவது தன்னார்வ எழுச்சிப் பேரணியாக இது அமைந்துள்ளது.

jaffna-demo-4jaffna-demo-5

 

Share.
Leave A Reply