ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட பணயக் கைதிகள் தலையை துண்டித்து கொல்லப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் எத்தகைய பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு சான்றாக அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட பிந்திய வீடியோ காட்சியொன்று லிபிய கடற்கரை பிரதேசமொன்றில் எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்துகின்ற நிலையில்,
அதனால் கவரப்பட்ட யேமனிய சிறுவர்கள் அதையொத்த போலியான வீடியோ காட்சியொன்றை தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட் டுள்ளனர்.
மேற்படி வீடியோ காட்சியில் சுமார் 10 வயது மதிக்கத் தக்க 5 சிறுவர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் முகமூடி அணிந்திருந்த 5 சிறுவர்களால் கடற்கரையோரமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தொடர்ந்து அந்த இளவயதினர் தம்மால் அழைத்து வந்த சிறுவர்களை தம் முன் மண்டியிருக்க பணித்த பின் அவர்களது தலையை கத்தியால் வெட்டித் துண்டிப்பது போல் பாசாங்கு செய்கின்றனர்.
மேற்படி கையடக்கத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியானது யேமனில் வளைகுடா கடற்கரையொன்றில் படமாக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதே சமயம் எகிப்திய இளவயதினரும் இதையொத்த பிறிதொரு வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.இதன் போது அந்த சிறுவர்கள் நிலத்தில் இறந்து விழுவது போன்று போலியாக நடித் துள்ளனர்.
மேலும் ஜப்பானைச் சேர்ந்த பாடசாலை சிறுமிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் மரண தண்டனை நிறைவேற்றத்தை வெளிப்படுத் தும் போலி தண்டனை நிறைவேற்ற காட்சியை உள்ளடக்கிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sick: The grainy mobile phone footage was reportedly filmed somewhere on the Gulf coast in Yemen