முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை  அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்­தி­ரே­லியா சென்றேன்.

அப்­போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலா­சாரம் தொடர்பில் தான் அறிந்­தி­ருந்­ததால் தனது மகள், மனை­வியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன் என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான பிர­சாந்த ஜயக்­கொடி தெரி­வித்தார்.

வெள்ளை வேன் கடத்­தல்­களின் பின்னால் இருந்த முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரிகள் தொடர்­பில என்­னிடம் ஆதாரம் உள்­ளது. அக்­கா­லப்­ப­கு­தியில் கருணா அம்மான் உள்­ளிட்ட ஆயுதக் குழுக்­களின் நட­மாட்டம் காணப்­பட்­டது.

வெள்ளை வேன் கலா­சரம் தொடர்பில் விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டால் நான் சாட்­சி­ய­ம­ளிக்க தயார் எனவும் பிர­சாந்த ஜய­கொடி மேலும் குறிப்­பிட்டார்.

அத்­துடன் நான் உயிர் அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளி­யே­றி­யமை தொடர்பில் நீதி­யான விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டு தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும்.

தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இணைந்து செயற்­பட நான் விரும்­பு­கின்றேன் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஒரு வரு­டமும் ஏழு மாதங்­களின் பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் நாடு திரும்பிய முன்னாள்  பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் இரத்­தி­ன­புரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான பிர­சாந்த ஜயகொடிநேற்று மாலை கொழும்பு கல­தாரி ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநாடு ஒன்றை நடத்­தினார். அதி­லேயே அவர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். .

அவர் அங்கு மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

Preshantha-Jayakody-350-newsமுன்னாள் பொலிஸ் பேச்சாளர் ஜயக்கொடி

மகிழ்ச்­சி­யான தருணம்

ஒரு வரு­டமும் 7 மாதங்­களும் கழித்து எனது தாய் நாட்­டுக்கு திரும்பி நான் பழ­கிய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளா­கிய உங்­களை சந்­திப்­பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்­சி­யாக உள்­ளது.

நான் ஏன் தாய் நாட்டை விட்டு சென்று அவுஸ்­தி­ரே­லி­யாவில் தஞ்சம் அடைந்தேன் என உங்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்கும். எனினும் நான் அதனை சொல்­கின்றேன்.

28 வருட சேவை

28 வருட பொலிஸ் சேவையைக் கொண்ட நான் 1977 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரி­சோ­த­க­ராக சேவையில் இணைந்துகொண்டேன்.

அன்­றி­லி­ருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது இரத்­தி­ன­பு­ரிக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக செயற்­பட்ட காலப்­ப­கு­திக்குள் எனக்­கெ­தி­ராக எவ்­வித ஊழல், மோசடி உள்­ளிட்ட குற்றச் சாட்­டுக்­களும் இல்லை. ஏனெனில் நான் நேர்­மை­யாக கட­மை­களை முன்­னெ­டுத்த ஒரு பொலிஸ் அதி­காரி.

திடீர் மாற்­றங்கள்

இந் நிலையில் நான் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ள­ராக கட­மை­யாற்­றிக்­கொன்­டி­ருந்த போது திடீர் திடீர் என கொழும்பின் பல்­வேறு இடங்­க­ளுக்கும் இட­மாற்­றப்­பட்டேன்.
இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தான் தற்­போ­தைய பொலிஸ் மா அதிபர் இதில் தலை­யிட்டு என்னை இரத்­தி­ன­பு­ரிக்கு பொறுப்­பன சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக நிய­மித்தார்.

ஏன் அகற்­றப்­பட்டேன்?

நான் பொலிஸ் பேச்­சாளர் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்­ட­மைக்கு இன்று வரை சரி­யான காரணம் எனக்கு தெரி­யாது. எனினும் சில கார­ணங்­களை நான் உணர்ந்­துள்ளேன். அதா­வது கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சாத­கா­மாக நான் கருத்து வெளி­யி­டாமல் இருந்­ததால் என்னை மாற்­றி­யி­ருக்­கலாம்.

அந்த சம்­பவம்

இதற்கு உதா­ர­ண­மாக ஒரு சம்­ப­வத்தை நான் கூறு­கின்றேன். பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் மொண­ரா­க­லைக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் சட்ட விரோத  மணல் அகழ்வு தொடர்பில் அப்­போ­தைய அரச தரப்­புடன் தொடர்­பு­பட்ட ஒரு குழு அங்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை தாக்­கி­யி­ருந்­தனர்.

எனது அறிக்­ககை

இதன் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப்­புக்கு எதி­ராக நடவ்­டிக்கை எடுத்த போது பலர் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றை நடத்­தினர்.

இதன் போது பொலிஸார் செயற்­பட்ட விதம் மிகச் சரி­யாக இருந்த நிலையில் நான் மறு நாளே பொலி­ஸாரின் கட­மைக்குள் அர­சியல் வாதிகள் தலை­யீடு செய்­வ­தா­கவும் அது ஆரோக்­கி­ய­மா­னது அல்ல எனவும் பொலிஸார் செயற்­பட்ட விதம்சரியெனவும் ஒரு ஊடக அறிக்­கையை வெளிட்­யிட்டேன்.

அது அனைத்து பத்­தி­ரி­கை­க­ளிலும் வெளி­யா­கின. இத­னை­ய­டுத்து நான் அர­சுக்கு எதி­ராக கருத்துக் கூறு­வ­தாக அர­சியல் வாதிகள் முறை­யிட்­டுள்­ளனர்.

எனது பணி

இத­னை­விட புதி­தாக நிய­மனம் பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கு கந்­தானை பொலிஸ் கல்­லூ­ரியில் ஒரு நாள் பொது­மக்கள் உறவு குறித்து விளக்­க­ம­ளிக்க சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரான நான் பொலிஸ் மா அதி­பரால் நியமிக்கப்பட்டேன்.

அதில் பொலி­ஸாரின் தவ­றான விட­யங்­களை ஊட­கங்கள் சுட்­டிக்­காட்டும் போது அதனை எப்­படி அனு­கூ­ல­க­மாக பார்ப்­பது, சிறந்த பொலிஸ் சேவையை எப்­படி உரு­வாக்­கு­வது என்­பது குறித்து விளக்­க­ம­ளித்தேன்.

கோத்­தாவின் தொலை­பேசி அழைப்பு

அதனை முடித்­துக்­கொண்டு கொழும்­புக்கு வர முன்­ன­ரேயே எனக்கு அப்­போ­தைய பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பய ராஜ­ப­க்ஷ­விடம் இருந்து தொலை­பேசி அழைப்பு வந்­தது.

நான் அர­சுக்கு எதி­ராக கருத்து வெளி­யி­டு­வ­தா­கவும் பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களை தூண்­டு­வ­தா­கவும் எச்­ச­ரிக்­கப்ப்ட்டேன். இது தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவ­ரட்ன முன்­னி­லையில் எனக்கு எதி­ராக விசா­ரணை இடம்­பெற்­றது.

எனது விளக்க உரையின் ஒலி வடிவம் என்­னிடம் இருந்­ததால் நான் அப்­படி அர­சுக்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை என்­பதை என்னால் நிரூ­பிக்க முடிந்­தது.

இரத்­தி­ன­பு­ரிக்கு மாற்றம்

இந் நிலை­யி­லேயே நான் இரத்­தி­ன­புரி பிர­தே­சத்­துக்கு பொறுப்­பாக இட­மாற்றம் பெற்றேன். இந்த காலப்­ப­கு­திக்குள் சட்­டத்தை அமுல் செய்­வதில் எனக்கு பாரிய தடங்­கல்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

இரத்­தி­ன­பு­ரியில் இயங்­கிய பொது­மக்­க­ளுக்கு இடைஞ்­ச­லான சட்ட விரோத கேளிக்கை விடு­தி­களை நான் அகற்ற நடவ்­டிக்கை எடுத்த போது அப்­பி­ர­தேச அர­சியல் வாதிகள் உள்­ளிட்ட பலரின் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளானேன்.

பல அழுத்­தங்கள்

எம்­பி­லி­பிட்டி பிர­தேச சபையின் தலைவர் சண்டி மல்லி எனப்­பட்ட எம்.கே.அமி­லவை பொலி­ஸாரை தாக்­கிய குற்றச் சாட்டில் கைது செய்ய முயன்ற போதும் தடங்­கல்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

அத்­துடன் இரத்­தின புரி பிர­தே­சத்தில் சட்ட விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட பல வர்த்­த­கர்கள் அர­சியல் வாதிகள் ஊடாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர். பிர­தேச அர­சியல் வாதிகள், மாகாண அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என இதில் அனை­வரும் உள்­ள­டங்­குவர்.

கடு­மை­யாக திட்­டினார்

இந் நிலையில் தன் அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ என்னை பாது­காப்பு அமைச்­சுக்கு அழைத்து ஒரு நாள் கடு­மை­யாக திட்டித் தீர்த்து அச்­சு­றுத்­தினார்.

இதனைத் தொடர்ந்து பல்­வேறு தொலை­பேசி அழைப்­புக்­களின் ஊடாக எனக்கும் குடும்­பத்­தி­ன­ருக்கும் மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது.

“சவப் பெட்­டியை தயா­ராக வைத்­துக்கொள்”

பல்­வேறு தொலை­பேசி அழைப்­புக்கள் ஊடாக வந்த அழைப்­புக்கள் ஊடாக உன்­னையும் உனது குடும்­பத்­தி­ன­ரையும் கொலை செய்வோம், சவப் பெட்­டியை தயா­ராக வைத்­துக்கொள் என்ற பல்­வேறு அச்­சு­ருத்­தல்கள் எனக்கு கிடைத்­தன.

அது தொடர்பில் நான் எனது மேல­தி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்த போதும் எவ்­வித பலனும் இல்லை. அந்த தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்தி விசா­ரித்து பார்த்­ததில் அந்த இலக்­கங்கள் பாது­காப்பு அமைச்சின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டவை என்­பதை நான் அறிந்­து­கொண்டேன்.

ஆத­ரவு தந்த ஆஸி.

இந் நிலையில் காட்­டாட்­சி­யொன்று இடம்­பெற்­றுக்­கொன்­டி­ருந்த, ஐக்­கிய நாடுகள் சபை­யினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட மனித நேய விட­யங்­க­ளுக்குள் உள்ள வாழும் உரிமை கூட இல்­லாத நிலையில் நான் அவு­ஸ­தி­ரே­லி­யா­வுக்கு தப்பிச் சென்றேன்.

சட்ட ரீதி­யா­கவே நான் அவுஸ்­தி­ரே­லியா சென்று அகதி அந்­தஸ்து பெற்றேன். அங்கும் என்னை தேடி­வந்­த­தாக தகவல் வரவே பல இடங்­களில் சென்று வாழ்ந்தேன். எனினும் அவுஸ்­தி­ரே­லிய அரசு எனக்கு பூரண ஆத­ரவு தந்­தது.

மகள், மனை­வியை நினைத்தே சென்றேன்

நான் மர­ணத்­துக்கு பய­மில்லை. எனினும் எனது மகள், மனைவி விட­யத்தை நினைத்தே இவ்­வாறு நான் தப்பிச் செல்ல வேண்டி ஏற்­பட்­டது.

அக்­கா­லத்தில் செயற்­பட்ட வெள்ளை வேன் கலா­சாரம் தொடர்பில் நன்கு அறிந்­தி­ருந்த நிலையில் நான் இவ்­வாறு சென்றேன்.

வெள்ளை வேன் கடத்­தல்கள் தொடர்பில் செயற்­பட்ட அல்­லது பின்­ன­ணியில் இருந்த இரா­ணு­வத்தின் அதி­கா­ரிகள் பலர் தொடர்பில் எனக்கு தகவல் தெரியும். இது தொடர்பில் உரிய விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டால் நான் சாட்­சியம் அளிக்­கவும் ஆதா­ரங்­களைக் கைய­ளிக்­கவும் தயா­ராக உள்ளேன்.

ஆயுத குழுக்கள்

அப்­போது பாது­காப்பு அமைச்சின் கீழ் ஆயுதக் குழுக்கள் செயற்­பட்­டன. இவர்­க­ளா­லேயே அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டன. புலிகள் இயக்­கத்தில் மிகப் பயங்­க­ர­மாக செயற்­பட்டு 600 பொலி­ஸாரை சுட்­டுக்­கொன்ற கரு­ணாவின் ஆயுதக் குழு யுத்­ததின் பின்­னரும் நட­மா­டி­யது.

தண்­டிக்­க­ப­ட­வேண்­டி­ய­வர்கள் ஆயுதக் குழு­வாக நட­மா­டிய நிலையில் சட்­டத்­தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் பலர் அவ்வாறு செயற்படவில்லை.

அதன் பலனாக கடந்த ஆட்சியில் பொலிஸ் திணைக்களம் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தது. சுதந்திரமாக செயற்பட முடியாமல் போனது. அதன் வெளிப்பாடே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சியை ஏற்படுத்தினர்.

நியமனம் தாருங்கள்

இந் நிலையில் ஒரு நல்லாட்சிக்கான ஆரம்பம் அமைக்கப்ப்ட்டுள்ள நிலையில் நான் நாட்டுக்கு திரும்பியுள்ளேன். நான் தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு சேவையாற்ற ஆவலாயுள்ளேன்.

எனக்கு மீண்டும் நியமனம் வழங்கக் கோரி நான் பொது நிர்வாக சேவைகள் திணைக்களத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். இந் நிலையில் நாட்டில் மீண்டும் பொதுமக்களுக்கு சேவை செய்யலாம் என நினைக்கின்றேன்.

Share.
Leave A Reply