பிரித்தானியாவை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் Flint + Flint என்ற நிறுவனம் குளிப்பது பற்றி சமீபத்தில் சுமார் 2, 000 பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது.
இதில் பெரும்பாலான பெண்கள் அலுவலக வேலை களைப்பால் மாலை வேளைகளில் குளிப்பதில்லை என தெரியவந்துள்ளது.
அதிலும் மூன்றில் ஒரு நபர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, முகம், தலைமுடி, உடல் ஆகியவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்தாமல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 60 சதவிகித பெண்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் முகத்தில் உள்ள ‘மேக்அப்’பை கூட தண்ணீரால் கழுவ மாட்டார்கள்.
மேலும் தூக்கத்திற்கு முன் முகத்தை தண்ணீரால் சுத்தப்படுத்தினால், ஆழமான தூக்கத்தை இழக்க நேரிடுவதாக 35 சதவிகித பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனைதொடந்து சுமார் 57 சதவிகித பெண்கள் சுகாதரத்தின் அவசியம் தெரிந்திருந்த போதிலும், அதை பராமரிக்க கால அவகாசம் கிடைக்கவில்லை என்றும், இதை சமாளிக்க தண்ணீரால் நனைத்த பஞ்சு துணிகளை(ஙிடிணீஞுண்) பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் 5 பெண்களில் ஒரு நபர் மட்டுமே தினந்தோறும் தவறாமல் குளிப்பதும், 30 சதவிகித பெண்கள் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு குளிக்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நடத்திய நிறுவனம் கூறுகையில், சுமார் 90 சதவிகித பெண்கள் வேலை களைப்பின் காரணமாக தங்கள் உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க இயலவில்லை என கூறியதாக தெரிவித்துள்ளனர்.