கல்கத்தாவில் நடத்திய “நேரடிப்” போராட்டம் தாங்கள் நினைத்த அளவிற்கு நடக்காததுடன், இந்து மற்றும் சீக்கியர்களின் எதிர்பாராத எதிர்த்தாக்குதல்களில் ஏராளமான முஸ்லிம்களும் கொல்லப்பட்ட ஆத்திரத்திலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கிழக்கு வங்காளத்திலிருந்த இந்துக்களின் மீது கண்மூடித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

கிழக்கு வங்காளம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் பகுதி என்பது நினைவிருக்கட்டும்.

நவகாளி-திப்பெரா (Noakali-Tippera) என்ற பகுதியில் 1946-47-ஆம் ஆண்டுகளில் இந்துக்களின் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. “நவகாளி” கலவரங்கள் என்று அறியப்படும் அந்தக் கலவரம் மிகக் கொடூரமானது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து சவூதி அரேபியாவின் வஹாபிய, அஞ்சுமன் (Wahabi and Anjuman) இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் கிழக்கு வங்காளத்தில், குறிப்பாக முஸ்லிம்கள் 80-85 சதவீதம் வசிக்கும் நவகாளிப் பகுதியில் பரவியது.

இந்தப் பயங்கரவாதமே நவகாளி மற்றும் ஃபெனி, கோமில்லா மாவட்டங்களிலிருக்கும் 350-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் முஸ்லிம்கள் இந்துக்களை தாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

corpses-lying-among-pieces-of-wood-in-preparation-for-cremation-after-bloody-rioting-between-hindus-and-muslims-2-calcutta-kolkata-1946-300x237இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவரும், பிற்காலத்தில் கிழக்கு பாகிஸ்தானிய சட்டசபை அங்கத்தினருமாகவும் இருந்த பி.சி. லெஹரி, “கல்கத்தாவில் தோல்வியுற்ற முஸ்லிம் லீக் தனது “நேரடிப்” போராட்டத்திற்கு நவகாளியைத் தேர்ந்தெடுத்தது.

நவகாளியில் வெறும் 18 சதவீதமாக இருந்த இந்துக்களின் மீது கொள்ளையும், படுகொலைகளும், இந்துப் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளும், கட்டாய மதமாற்றங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டன” என்கிறார்.

நவகாளியிலிருந்த காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தாவிலிருந்த காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி (telegram) இந்தப் பயங்கரத்தை தெளிவாக்குகிறது.

Men-unloading-corpses-from-truck-in-preparation-for-cremation-after-bloody-rioting-between-Hindus-and-Muslims-2-Calcutta-Kolkata-1946-300x248

“ஏராளமான வீடுகள் எரிக்கப் பட்டு விட்டன / ஆயிரக் கணக்கானவர்கள் எரித்துக் கொல்லப் பட்டார்கள் / பல ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் / ஏராளமான இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டார்கள் / எல்லா இந்து ஆலயங்களும் இடிக்கப்பட்டு அங்கிருந்த சிலைகள் உடைக்கப்பட்டுவிட்டன / ஏராளமான அகதிகள் திப்பாரா மாவட்டத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் / கோலம் சார்வார் முஸ்லிம்கள் எல்லா இந்துக்களையும் கொன்று அழிக்குமாறு முஸ்லிம்களிடம் தூண்டுதல்….”

நவகாளி கலவரம்  பிர் (Sufi Master) மவுல்வி கோலம் சார்வார் என்பவனின் தூண்டுதலால் நடத்தப்பட்டது. கல்கத்தாவில் நடந்த கலவரத்திற்கு   இந்துக்களை முக்கியக் காரணமாகக் குற்றம் சாட்டிய கார்வார், அங்கு கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி ஆதாரமற்ற தகவல்களை முஸ்லிம்களிடையே திட்டமிட்டுப் பரப்பினான்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் முல்லாக்கள் இஸ்லாமியர்கள் கூடும் இடங்களில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பினை உமிழ்ந்ததுடன், நவகாளி முஸ்லிம்களைக் கொல்வதற்காக இந்துக்கள் ஏராளமான இந்து மற்றும் சீக்கியப் போராளிகளை ரகசியமாக  நவகாளிக்கு  வரவழைத்திருப்பதாகவும்  பொய்த் தவகவல்களை பரப்பினர்.

அதனைத் தொடர்ந்து 1946-ஆம் வருட அக்டோபர் மாத மத்தியில் ஏராளமான (இந்துக்கள்) கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள்.

இந்துக்கள் வசித்த பல கிரமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. நவகாளியின் அத்தனை இந்துக்களும் ஒருவர் விடாமல் கொள்ளையடிக்கப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்துக் கோவில்கள் தகர்க்கப்பட்டு, ஆலயச் சிலைகள் உடைத்தெறியப்பட்டன. ஏறக்குறைய நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய  மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப்பட்டார்கள்.

மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு மதம் மாறிய இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ண வைக்கப்பட்டு, கல்மாவைப் (kalma) படிக்க வைக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்த பசுக்கள் கொல்லப்பட்டு அதன் மாமிசம் உண்ணப்பட்டது.

இதே நிலைமை நவகாளிக்கு அருகிலிருந்த திப்பெரா மாவட்டத்திலும் இருந்தது. நவகாளிக்கு நவம்பர் மாதம் வந்த மகாத்மா காந்தி, முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று அகிம்சையை போதிக்க ஆரம்பித்தார்.

தங்களின் அருகில் வசிக்கும் இந்துக்களை தங்களின் நண்பர்களாக நடத்தும்படி வேண்டியதுடன், அகதி முகாம்களில் தங்கியிருந்த இந்துக்கள் மீண்டும் தங்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டினார்.

நவகாளியில் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அருகிலிருந்த பிகாரில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

அன்றைய கல்கத்தாவின் ஏராளமான வணிகத்தலங்களும், சிறு தொழிற்சாலைகளும் பிகாரிகளுடையவையாக இருந்தன.

கல்கத்தாவில் முஸ்லிம்கள் நடத்திய “நேரடி” போராட்டத்தின் விளைவாக அவர்களின் (பிகாரிகளின்) வீடுகளும், தொழில்களும் எரித்து அழிக்கப்பட்டதால் ஏராளமான பிகாரிகள் தங்களின் வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் கொண்டுவந்த படுபயங்கரமான தகவல்கள் பிகாரி இந்துக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கும் மேலாக பிகாரி முஸ்லிம் தலைவர்களின் வன்முறையத் தூண்டும் பேச்சுக்களும் பிகாரி இந்துக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

வாளின் வலிமையையும் அதனால் முஸ்லிம்கள் அடைந்த வெற்றியையும் குறித்து பிகாரி முஸ்லிம் தலைவர்கள் பொதுக் கூட்டங்களில் பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

கல்கத்தாவில் முஸ்லிம் லீக் “நேரடி” போராட்டத்தைத் துவங்கிய அதே நாளில் ஒரு கூட்டத்தில் பேசிய பிகாரி முஸ்லிம் தலைவரான சையத் முகமது அப்துல் ஜலீல், “இந்துக்களின் தாக்குதல் அகிம்சையின் அடிப்படையிலானது…

ஆனால் நமது தலைவர்களான காயிதே-ஆஸம் (ஜின்னா), நசிமுதீன் மற்றும் சுஹ்ராவர்த்தி போன்றவர்கள் அகிம்சைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். எனவே நமது போராட்டம் கையில் கிடைக்கு எந்த ஆயுதத்தினையும் கொண்டு நடத்தப்பட வேண்டும்”.

“அல்லாவின் சுவனத்திற்குப் போக ஒன்று நாம் காஃபிர் இந்துக்களைக் கொல்ல வேண்டும்; அல்லது அவர்களால் கொல்லப்பட வேண்டும்” என்று பிகாரின் இஸ்லாமிய மாணவர்களின் அமைப்பு

அறைகூவல் விடுத்தது. இது போன்ற பேச்சுக்களும், கல்கத்தாவின் நிகழ்வுகளும் பிகாரி இந்துக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியிருந்தன.

இதன் உச்சமாக பிகரின் முஸ்லிம் லீக் தலைவராகவும், ஆடைகள் வினியோகம் துறையின் (போர்க்காலமாதலால் துணிகள் ரேஷன் முறையில் வழங்கப்பட்டது) செகரட்டரியாகவும் இருந்த பிகார்ஷெரிஃப், அங்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு துணியிலும், “அல்லாஹூ அக்பர், நாங்கள் பாகிஸ்தான் அடையும் வரை ஓய மாட்டோம்” என அச்சடித்து வினியோகம் செய்தார்.

இது இப்படி இருக்க, அக்டோபர் மாத மத்தியில் நவகாளி பயங்கரங்களைக் குறித்த செய்திகள் பிகாரை வந்தடைய ஆரம்பித்தது.

இதற்கிடையே தென் பிகாரின் முஸ்லிம் லீக் செயலாளர்  முஸ்லிம்களிடையே வினியோகித்த அச்சடித்த, வன்முறையைத் தூண்டும் சுற்றறிக்கைகள் பல பிகாரின் பிற பகுதிகளிலும் வினியோகிக்கப்பட்டன.

இந்திய இந்துக்களை “இஸ்லாமின் எதிரிகள்” என அழைத்த அந்தப் பிரசுரம், “அவர்களின் (இந்துக்களின்) வெட்டப்பட்ட ரத்தம் தோய்ந்த தலைகள் போர்க்களத்தில் மண்ணில் கிடக்கும்” என்றது.

dead-at-punjab-after-partition-300x206 இன்னொரு சுற்றறிக்கை முகமதலி ஜின்னாவிடம், “இந்து காஃபிர்களுக்கு இத்தனை வருடங்கள் நேரம் கொடுத்தோம்.

இருண்ட காஃபிரி மதமான இந்துமதத்தை அழித்து, உலகிற்கு ஒளியூட்டும் இஸ்லாத்தை நிறுவ நமக்கு நேரம் வந்துவிட்டது.

அரேபியாவில் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் காஃப்ரி இந்துக்களைக் கொன்று இந்த உன்னத காரியத்தைச் செய்வோம்” என வலியுறுத்துகிறது.

கல்கத்தாவில் வெளியிடப்பட்ட மற்றொரு துண்டுப் பிரசுரம், முகமதலி ஜின்னா நேரடியாக சொன்னதாகச் சொல்லப்பட்டதெனக் கூறப்படும், “இந்து மதத்தை அழித்து இந்துக்களை மதம் மாற்றுவது அல்லது கொல்வது, மேலும் பிரிவினையை எதிர்க்கும் தேசியத் தலைவர்களைக் கொலை செய்வது, மற்றும் இந்துப் பெண்கள் மீதான பாலியல் வன்முறையைத் துவங்குவது” போன்ற செய்திகளைப் பறைசாற்றுகிறது.

இவ்வாறு முஸ்லிம்களால் திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகள், கொள்ளைகள், அடிமைப்படுத்துதல்கள், கற்பழிப்புகள், கட்டாய மதமாற்றங்கள்….போன்றவை இந்திய இந்து காங்கிரஸ் தலைவர்களை அச்சமூட்டி அவர்களைப் பணியச் செய்து பாகிஸ்தானைப் பெறுவதற்கான ஒரு தந்திரம் என்பதினை பிகாரி இந்துக்கள் மெல்ல, மெல்லப் புரிந்து கொள்கிறார்கள்.

கலவரச் சூழல் உருவாவதினைப் புரிந்து கொண்ட இந்திய அரசியல் தலைவர்கள் இந்துக்களை அமைதி காக்குமாறு வேண்டுகிறார்கள்.

இருப்பினும் அக்டோபர் 25-ஆம் தேதி பிகாரில் துவங்கிய மதக்கலவரம், நவம்பர் 3-4 தேதிகளில் உச்சத்தை அடைந்து பின்னர் நின்றது.

அந்தப் பனிரெண்டு நாட்கள் நடந்த கலவரங்களில் பிகாரி இந்துக்கள் தங்கள் சகோதரர்களின் மீது கல்கத்தாவிலும், நவகாளியிலும் முஸ்லிம்கள் நடத்திய வெறியாட்டத்திற்கு ஒரு பதிலாக அமைந்தது.

பிகார் காவல் துறை இந்தக் கலவரங்களைக் கட்டுப்படுத்த ஈடுபாட்டுடன் செயல்பட்டாலும், அதனை அடக்குவது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்களும், இந்துக்களும் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டாலும், எப்போதும் போல முஸ்லிம் லீக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்திக் காட்டியது.

(தொடரும்

Share.
Leave A Reply