கடந்த செவ்வாயன்று கிங்ஸ்பரி விடுதியில் அவர் வழங்கிய உரையொன்றில், யுத்தத்தின் இறுதி வருடங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு அங்கத்தையும் வெளிப்படையாக போட்டுடைத்தார், அவற்றை கூறுகையில் இராணுவத்தின் வெற்றிக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகள் என்று அவர் தெரிவித்த சிலவற்றையும் அங்கு வெளிப்படுத்தினார்.
அப்போது இருந்த அரசியல் சக்திகள் தங்கள் குறுக்கீடுகள் மூலம் யுத்தக்களத்தில் பின்னடைவுகளையும் அதேபோல உயிரிழப்புகளையும் எப்படி ஏற்படுத்தின என்பதையும் அவர் பரகசியப்படுத்தினார்.
அவரது உரையின் ஆரம்பத்தில்…, எல்.ரீ.ரீ.ஈயின் முழு இராணுவ தகுதிகளையும் அதேபோல இராணுவ நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை இலக்கு வைக்கும் அவர்களது வியூகத்தையும் தெளிவாக விளக்கினார்.
பின்னர் அவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தகுதிகளை விவரிக்கத் தொடங்கிய வேளையில் யுத்தம் முழுவதும் யுத்த தளபாடங்கள் ஆட்சேர்ப்பு மற்றும் யுத்த மூலோபாயங்கள் உட்பட முகங்கொடுக்க வேண்டியிருந்த பல சவால்களை அவர் பிரதானப்படுத்திக் காண்பித்தார்.
அவர் மேலும்... ஈழப்போர் – 1 மற்றும் ஈழப்போர் – 4 இடையேயான காலக்கிரமமான நிகழ்வுகளைப் பற்றி விபரித்த போது, இராணுவ மூலோபாயம் மற்றும் இராணுவத்திலுள்ள வருடக்கணக்கான குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்தார்.
தான் இராணுவத்தை பொறுப்பேற்றபோது, தேவைப்படும் இலக்கு எதிரியிடமிருந்து நிலத்தை கைப்பற்றுவதிலிருந்து அவர்களை நிர்மூலமாக்க வேண்டியதை நோக்கி முற்றாகத் திரும்ப வேண்டும் என உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
“என்னுடைய விடயத்தில் நாங்கள் பயங்கரவாதிகளை அழித்தால் நிலங்கள் எங்கள் கைகளில் தானாகவே வந்துவிழுவதற்கு வழியமைக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.
நான் எப்போதும் பயங்கரவாதிகளை அழிப்பதற்கே முன்னுரிமை வழங்கி தன்னிச்சையாக நிலங்கள் எங்கள் கைகளில் வருவதை யதார்த்தமாக்கியிருந்தேன்” என அவர் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது இந்த இலக்கை மாற்றியது, கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளின் இலட்சியங்களுடன் எப்போதும் ஒத்துவரவில்லை, ஏனெனில் இதன் காரணமாக சிலவேளைகளில் யுத்தம் ஒரு குறிக்கப்பட்ட காலத்துக்கு நீட்டிக்கப்படலாம் என அவர்கள் நினைத்தார்கள்.
அப்போதிருந்த கட்டளைத் தலைவரும் அவரின் “பிரபலமான சகோதரரும்” தங்களது பொறுமையின்மையை தொடர்ச்சியாக என்னிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து வந்தார்கள் ஆனால் தான் நிலங்களை கைப்பற்றுவதிலi;ல எல்.ரீ.ரீ.ஈ படையினை சிறிதாக்குவதே முக்கியம் என உறுதியாக இருந்தேன்.
ஜெனரல் சுட்டிக்காட்டியது, தான் இராணுவத்தை கையேற்றபோது அதன் பலம் 116,000 படை வீரர்களாக இருந்தது. அனுமதிக்கப்பட்ட தொகை 132,000 ஆக இருந்த போதிலும் இராணுவத்தால் அதன் வெற்றிடங்களை நிரப்ப முடியாமல் இருந்தது.
எனினும் யுத்தம் நிறைவடைந்த வேளையில் அந்த தொகையுடன் மேலும் 86,000 பேரை கூட்டும் அளவுக்கு படை வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது.
ஜெனரல் பொன்சேகா தெரிவித்தது, ஸ்ரீலங்கா இராணுவத்தின் பலத்துக்கு சமாந்தரமாக எல்.ரீ.ரீ.ஈயின் பலமும் உயர்ந்தது, வெறும் 15 பேருடன் ஆரம்பித்த அதனது ஆட்சேர்ப்பு அதன் அணியில் 35,000 பேரைக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து நின்றது.
பிள்ளையான் மற்றும் கருணா போன்ற முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களை முன்னாள் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை கவனயீர்ப்பு செய்யும் விதமாக அவர் சொன்னது “நான் எனது கடமைகளை கையளித்தபோது நாட்டில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் எண்ணிக்கை பூச்சியமாக இருந்தது.
உண்மையில் நான்கு பேர் எஞ்சி இருந்தார்கள், அவர்கள் அப்போது நாட்டின் தலைவராக இருந்தவரால் பாதுகாக்கப்பட்டார்கள்” என்று அவர் சொன்னார்.
ஜெனரலின் கூற்றுப்படி, எல்.ரீ.ரீ.ஈ நான்கு மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தது: 1991ல் ஆனையிறவில் இருந்த படையணிமீது தாக்குதல் நடத்தியது, 1996ல் முல்லைத்தீவு படைப்பிரிவின்மீது தாக்குதல் நடத்தியது, அங்கு அவர்கள் சுமார் 1,500 வீரர்களை துடைத்து அழித்தனர், 1996ல் கிளிநொச்சி படைப்பிரிவு மீது தாக்குதல் நடத்தியது, 1999ல் வவுனியா மற்றும் மாங்குளம் இடையே நிலைகொண்டிருந்த நான்கு பிரிவு துருப்புக்களை தாக்கியது.
இறுதி தாக்குதலில் எல்.ரீ.ரீ.ஈக்கு முடிவுகட்ட இரண்டு வாரங்களே பிடித்தது, அதேசமயம் அந்த நேரத்தில் இழந்த இடங்களை திருப்பிக் கைப்பற்ற இராணுவத்துக்கு கிட்;டத்தட்ட இரண்டு வருடங்கள் பிடித்தன.
2000ல் ஆனையிறவில் இருந்த இரண்டு பிரிவுகளின் தளத்தை எல்.ரீ.ரீ.ஈ கைப்பற்றியது, அதுதான் அவர்கள் ஒரு இராணுவ முகாமை கைப்பற்றிய கடைசி சந்தர்ப்பம்.
“அந்த நேரம் இராணுவத்தின் மன உறுதி மிகவும் குறைவாக இருந்தது. நாங்கள் புறங்காட்டி ஓடிக்கொண்டிருந்தோம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ மிகவும் திறமையாகச் செயற்பட்டு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது” என்றார் அவர்.
எல்.ரீ.ரீ.ஈயின் ஆயுத பலம் மற்றும் நீரிலும் அதேபோல ஆகாயத்திலும் அதன் திறமைகளை சுருக்கமாக விளக்கிய ஜெனரல், அந்தப் பயங்கரவாத குழுவால் இராணுவத்திற்கு அடிக்கு அடி வழங்க இயலுமாக இருந்த அதேவேளை, கொடிய தாக்குதல்களை நடத்தவும் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் இலகுவில் ஊடுருவும் அளவுக்கு பலமும் இருந்தது.
“ஒரு இடத்தில் நீங்கள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு பாராட்டு வழங்க வேண்டும், தங்களிடம் கடைசி மனிதன் மற்றும் கடைசி ரவை மீதமாக உள்ளவரை அவர்கள் போராடினார்கள். அவர்கள் மிகவும் ஊக்கமுள்ளவர்களாக இருந்தார்கள் திரும்பி ஓடுவதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.
உண்மையில் அவர்களால் திரும்பி ஓட முடியாதிருந்தது, ஏனென்றால் அவர்கள் அப்படி செய்திருந்தால் அவர்களின் தலைவர்களால் சுடப்பட்டிருப்பார்கள்” என்றார் அவர்.
அவர் மேலும் தெரிவித்தது இராணுவ மற்றும் காவல்துறை புலனாய்வு பிரிவுகள் திறமையில் எல்.ரீ.ரீ.ஈயின் உளவுத்துறைக்கு முன்னால் கிட்ட நெருங்கவே முடியாது, அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம், பயங்கரவாதிகள் அரசாங்க நிறுவனங்கள் அதேபோல முன்னணி அதிகாரிகள் ஆகியவற்றில் எவ்வளவு சுலபமாக ஊடுருவியிருந்தார்கள்.
யுத்தத்துக்கு முன்னதான தயாரெடுப்பு
ஜெனரல் சரத் பொன்சேகா 2006ல் இராணுவத்தை கையேற்றார், ஆனால் அதற்கு வெகு காலத்துக்கு முன்னரே அவர் தவிர்க்க முடியாத இறுதி மோதலுக்கு தன்னை தயார் படுத்தியிருந்தார்.
2002ல் அவர் யாழ்ப்பாண தளபதியாக இருந்தார் ஆனால் அந்தக் கட்டத்தில் நாடு திரும்ப யுத்தத்தில் ஈடுபட்டால் இராணுவத்துக்கு தலைமை தாங்க தன்னைவிட சிறப்பான மூத்த அதிகாரிகள் எவரும் படையில் இருக்கவில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
சமாதானம் பற்றிய பல்வேறு வாக்குறுதிகள் அந்த நேரத்தில் ஜனாதிபதியால் அவரது மகிந்த சிந்தனை வெளியீடு ஊடாக வழங்கப்பட்ட போதிலும் அவை யாவும் தோல்வியடையும், யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கும் என்பதை தான் அறிந்திருந்ததாக அவர் சொன்னார்.
“நான் பயிற்சி எடுக்கவும் மற்றும் வியூகங்களை தயார் செய்யவும் ஆரம்பித்தேன். முதலாவதாக நான் வடக்கில் பாதுகாப்பை தயார் செய்ய ஆரம்பித்தேன். ஒரு நீடித்த போருக்கு தயாராக இருக்கவேண்டி இருந்தது. இராணுவ மூலோபாய விதிமுறைகளுக்கு ஏற்ப நான் சவால்விட வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.
உருவாக்கத்தில் ஒரு மாற்றம் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் நடைமுறை நெறிகளில் இருந்து ஒரு விலகல் என்பனதான் ஜெனரல் கவனம் செலுத்திய முதல் விடயம். இராணுவம் பாரிய இழப்புக்களை சந்திக்க வேண்டியிருந்தது ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் பிரதான சாலைகளைப் பயன்படுத்தி குறுகிய வரைகளில் தான் முன்னேறினார்கள், அதற்கான காரணம் படைகள் விநியோக ஆதரவில் அதிக கவனம் செலுத்தியதுதான்.
“ பயங்கரவாதிகளின் மனித வலுவையும் மற்றும் சுடுதிறனையும் கலைக்க வேண்டுமாயின் நாங்கள் 15 – 20 கி.மீ அகலமான பரந்த முன்னிலையில் முன்னேறவேண்டும் என்பதை உணர்ந்தோம்”
இது இராணுவத்தை எதிரியுடன் பரந்த பரப்பளவில் ஈடுபாடு நடத்த உதவியது., அதன் கருத்து எதிரியின் வரை கணிசமானளவு குறுகியது என்பதுதான்.. ஸ்ரீலங்கா இராணுவத்தின் பெரும் எண்ணிக்கையுடன் இந்த வியூகம் அதன் இழந்த பகுதிகளை திரும்ப கைப்பற்றும் திறனை பெருமளவு மேம்படுத்தியது.
இது தளபதிக்கு தனது பலம் அனைத்தையும் ஒரே இடத்தில் செலுத்தாமல் தனது படைப் பிரிவை பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தக் கூடியதாக இருந்தது. படைத்தளத்தின் முக்கியமான பிரதேசங்களுக்கு வாராந்தம் வருகை தருவதன் மூலம் அனைத்துப் பகுதிகளைப் பற்றிய கள நிலைமையை ஜெனரலால் அறியக்கூடியதாக இருந்தது.
பல முனைகளிலும் இருந்து போராட்டம் நடத்தும் யுத்தம்
எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான வடக்கு யுத்தத்தில் நான்கு முனைகளில் இருந்தும் போராட வேண்டியது அவசியம் என்று, அவர் அடையாளம் கண்ட அந்த நான்கு முனைகளும் வவுனியா, மன்னார், வெலிஓயா மற்றும் முகமாலை என்பனவாகும். அதனால் கிழக்கை திரும்ப கைப்பற்றியதை தொடர்ந்து பல முனைகளிலும் இருந்து போரைச் சமாளிப்பது கடினம் என்பதை எதிரி அறிந்து கொண்டான்.
“ நாங்களும் நால்வர் அணிகளை வைத்து போராட ஆரம்பித்தோம், அவர்கள் காடுகளில் ஆழமாக ஊடுருவி செயற்பட பயிற்சி பெற்றவர்கள்.
அவர்கள் சுய நம்பிக்கையுடனும் மற்றும் சுதந்திரமாகவும் செயற்பட பயிற்றப்பட்டவர்கள். எனவே ஒரு படைப்பிரிவில் அதிக எண்ணிக்கையிலான நான்குபேர் அணிகள் இருந்தன, அது எங்களை பரந்த முனைகளில் இருந்து செயற்பட அனுமதித்தது” என்று அவர் விளக்கினார்.
இந்த விசேட பிரிவு தங்கள் உணவுகளை தாங்களே சமைக்கவும் மற்றும் தங்கள் முதுகுகளில் 100 இறாத்தல் வரையான பாரத்தை சுமக்கவும், காயமடைந்த சக வீரனை காவியபடியே ஏனைய பிரிவுகளுடனும் தொடர்பு கொள்ளவும் பயிற்றப்பட்டவர்கள்.
அவர்களுக்கு தேவையான நேரம் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி உதவி என்பனவற்றுக்கு கோரிக்கை விடவும் கூட அவர்களால் இயலும்.
சீன ஜெனரலும் மற்றும் இராணுவ மூலோபாயவியலாளருமான சண் ற்றுசு வின் ‘உனது எதிரியை அவனது பலவீனமான பகுதியில் இருந்து தாக்கு’ என்கிற பிரபலமான அறிவுரையையும் மீறி ஜெனரல் பொன்சேகா எல்.ரீ.ரீ.ஈயின் பலமான பக்கங்களில் தாக்குவதை தெரிவு செய்தார்.
“எதிரியின் பலமான இடத்தை நோக்கி நாங்கள் தாக்குதல் நடத்தினால், அதைக் காப்பாற்ற தங்களது சகல பலத்தையும் அங்கு அவர்கள் பயன்படுத்தவார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அப்போதுதான் எங்களால் உயர்ந்த பட்ச இழப்புகளை ஏற்படுத்த முடியும். அதனால்தான் வவுனியாவின் மேற்குப் புறத்தை ஒரு யுத்த முனையாகத் தெரிவு செய்தேன்” என அவர் சொன்னார்.
அடுத்ததாக இராணுவம் மன்னாரிலிருந்து தாக்கத் தொடங்கியது, அங்கு எல்.ரீ.ரீ.ஈ பரந்த அளவிலான நெல் வயல்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இந்த இடத்தை கைப்பற்றுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருதினார், ஏனெனில் நெல் வயல்கள் இல்லாமற் போனால் எல்.ரீ.ரீ.ஈ மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்.
“கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாங்கள் பாரிய யுத்தத்தினை நடத்தி வந்தோம், ஆனால் ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை. நாங்கள் அவர்களுக்கு பாரியளவு இழப்புகளை ஏற்படுத்தி வந்தோம். கட்டளை தளபதி இந்த வழியில் போராடுவதன் மதிப்பு பற்றி ஒருபோதும் அறிந்திருக்கவில்லை”.
கிழக்கில் முழுதாக வெற்றி பெறுவதற்கு முன்பு கூட ஜெனரல் பொன்சேகா வடக்கில் ஒரு மேலதிக படைப்பிரிவை இயக்கினார். கிழக்கில் வெற்றி கிடைத்த உடனடியாகவே வடக்கிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கிழக்குக்கு நகர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும் தங்கள் எண்ணிக்கை உயர்த்துவதை தடுக்வேண்டியதை உறுதியாக்கும் பொருட்டு வடக்கிலுள்ள இராணுவ படைகளை பலப்படுத்துவது மிகவும் முக்கியம் என அவர் உணர்ந்தார்.
(தொடரும்)