முன்­னைய மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக்ஷ கைது செய்­யப்­ப­டு­வாரா? என்ற கேள்­வியே இப்­போது சூடான விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது.

‘அவன்ற் கார்ட்(Avant Garde Security Services (Pvt) Ltd) என்ற கடல் பாது­காப்பு நிறு­வ­னத்தை சட்­ட­வி­ரோ­த­மாக இயக்­கிய குற்­றச்­சாட்டில் அவரைக் கைது செய்­வது குறித்து அர­சாங்கம் ஆலோ­சித்து வரு­கி­றது.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், மகா­நு­வர என்ற மிதக்கும் ஆயுதக் களஞ்­சியம் காலி துறை­மு­கத்தில் வைத்து பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டது.

அது அவன்ற் கார்ட் ­நி­று­வ­னத்­தினால், சர்­வ­தேச கடற்­ப­ரப்பில், செல்லும் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பு மற்றும் ஆயு­தங்­களை விநி­யோ­கிக்கப் பயன்­ப­டுத்­தப்­படும் மூன்று கப்­பல்­களில் ஒன்­றாகும். ஏனைய இரு ­கப்­பல்­களும் ஓமான், வளை­குடா மற்றும் செங்­கடல் பகு­தி­களில் தரித்து நிற்­கின்­றன.

மகா­நு­வர கப்­பலில் இருந்த ஆயு­தங்­களை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், ஆயுதப் புரட்­சிக்குப் பயன்­ப­டுத்த முனைந்­த­தா­கவே ஆரம்­பத்தில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

எனினும், பின்னர் சட்­ட­வி­ரோ­த­மாக கடல் பாது­காப்பு நிறு­வ­னத்தை இயக்­கி­ய­தா­கவே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்த வழக்கு நடந்து வரும் நிலையில், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக்ஷ, அவன்ற் கார்ட் ­நிறுவ­னத்தின் தலை­வ­ரான மேஜர் நிசங்க சேனா­தி­பதி, மேஜர் ஜெனரல் கே..பி.எகொ­ட­வெல, அட்­மிரல் சோம­தி­லக திஸா­நா­யக்க போன்­ற­வர்­களின் கட­வுச்­சீட்­டுகள் முடக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த அவன்ற் கார்ட்­ வி­வ­கா­ரத்தில், தான் சட்­டத்தின் படியே எல்­லா­வற்­றையும் செய்­த­தாக கோத்­தா­பய ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, கடந்த வாரம் நடந்த தேசிய நிறை­வேற்று சபைக் கூட்­டத்தில், கோத்­தா­பய ராஜபக் ஷவை கைது செய்து விசா­ரிக்­காமல் இருப்­பது குறித்து கார­சா­ர­மாக விவா­திக்­கப்­பட்­டுள்­ளது.

கோத்­தா­பய ராஜபக் ஷ மீது விசா­ரணை அதி­கா­ரிகள் பரி­வுடன் நடந்து கொள்­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஏற்­க­னவே குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் அவ­ரிடம் வீட்டில் சென்றே வாக்­கு­மூலம் பதிவு செய்­தி­ருந்­தனர்.

அவரை குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு அழைத்து விசா­ரிக்­கா­தமை குறித்து முன்­னைய பொலிஸ் பேச்­சாளர் அஜித் ரோக­ண­விடம் கேள்வி எழுப்­பிய போது, பொலி­ஸாரின் செயலை அவர் நியா­யப்­ப­டுத்திக் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

கிட்­டத்­தட்ட ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக, அர­சாங்­கத்தில் தனி­யான செல்­வாக்குப் பெற்­றி­ருந்த- அதுவும் பாது­காப்­புத்­து­றையில் செல்­வாக்குச் செலுத்­திய கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக அந்த துறையில் இருந்து நட­வ­டிக்கை எடுப்­பது ஒன்றும் அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மில்லை.

இதனை தற்­போ­தைய அர­சாங்­கமும் உணர்ந்­தி­ருக்­கி­றது. இதுதான் தேசிய நிறை­வேற்­றுச்­சபைக் கூட்டத்தில் எதி­ரொ­லித்­தி­ருக்­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவைக் கைது செய்­வது குறித்து, லண்டன் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி நாடு திரும்­பிய பின்னர் தேசிய நிறை­வேற்றுச் சபைக் கூட்­டத்தில் முடி­வெ­டுக்­கப்­படும் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக எந்த அங்­கீ­கா­ரமும் இல்­லாத தேசிய நிறை­வேற்­றுச்­ச­பையில், கோத்­தா­பய ராஜபக் ஷவைக் கைது செய்யும் முடிவு எவ்­வாறு எடுக்­கப்­பட முடியும் என்று தேசிய சுதந்திர முன்­னணி போன்ற கட்­சிகள் போர்க்­கொடி உயர்த்­து­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்பு அங்­கீ­காரம் இல்­லா­விட்­டாலும், தேசிய நிறை­வேற்­றுச்­ச­பையே தற்­போ­தைய அரசாங்­கத்தை வழி­ந­டத்தும் உயர் சபை­யாக இருக்­கி­றது.

ஆனாலும், தேசிய நிறை­வேற்­றுச்­ச­பைக்கு தெரி­யா­மலே இந்த அர­சாங்­கத்­தினால் பல முடி­வுகள் எடுக்கப்­ப­டு­கின்­றன.

இந்­த­நி­லையில், கோத்­தா­பய ராஜபக் ஷவைக் கைது செய்யும் முடிவு அர­சாங்­கத்தின் எந்த இடத்தில் இருந்தும் எடுக்­கப்­ப­டலாம். ஆனால் அதற்கு ஒன்­றுக்குப் பல­முறை யோசனை செய்ய வேண்டியிருக்கும்.

கடந்த ஜன­வரி 9ஆம் திகதி அதி­கா­லையில், அலரி மாளி­கையில் ஆட்­சியை மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடம் ஒப்­ப­டைக்க இணங்­கிய மஹிந்த ராஜபக் ஷ, தனது சகோ­த­ர­ரான கோத்­தா­பய ராஜபக் ஷ பழி­வாங்­கப்­படக் கூடாது என்­பதை ஒரு நிபந்­த­னை­யாக ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விடம் முன்­வைத்திருந்தார். அப்­போது ரணில் அதனை ஏற்றுக் கொண்­டி­ருந்தார்.

ஆனால், அவன்ற் கார்ட் விவ­கா­ரத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷவை விலக்கி விட்டு எந்த விசாரணையையும் மேற்­கொள்ள முடி­யாது.

காரணம், அந்த நிறு­வ­னத்தை உரு­வாக்­கி­யவர் அவரே.

Ship-02இந்த நிறு­வனம், சட்­ட­ரீ­தி­யாக பாது­காப்பு அமைச்சின் கீழ் தான் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. எனவே, சட்டவி­ரோ­த­மாக ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த குற்­றச்­சாட்­டு­களை மட்டும் வைத்துக் கொண்டு கோத்­தா­பய ராஜ­பக் ஷவைக் கைது செய்ய முயற்­சித்தால், அர­சாங்கம் கடை­சியில் மூக்­கு­டை­படும் நிலையே ஏற்­படும்.

சட்­ட­பூர்­வ­மாக கடலில் பய­ணிக்கும் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பு அளிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட அவன்ற் கார்ட்­ நி­று­வ­னத்தின் ஆயு­தங்கள் சட்­ட­வி­ரோத செயல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­னவா, அல்லது பயன்­ப­டுத்தத் திட்­ட­மி­டப்­பட்­டதா? என்­பதே தேவை­யான விசா­ரணை.

அந்தக் கோணத்தில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அதே­வேளை, பாது­காப்பு அமைச்சின் கீழ், கடற்­ப­டையின் கட்­டுப்­பாட்டில் இருந்த அவன்ற் கார்ட் ­நி­று­வ­னத்தை ரக்ன லங்கா பாது­காப்பு சேவை நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்க எடுக்­கப்­பட்ட முடிவு தான் மிகுந்த சர்ச்சைக்குரியது.

அவன்ற் கார்ட் (Avant Garde Security Services (Pvt) Ltd) நிறு­வ­னத்தை இயக்­கி­யதன் மூலம் கடற்­ப­டைக்கு கணி­ச­மான வருவாய் கிடைத்து வந்தது.

கடற்­ப­டையின் கட்­டுப்­பாட்டில் இருந்த போது, இந்த நிறு­வனம் மாதம் 9 மில்­லியன் டொலரை வருமான­மாக பெற்று வந்­தது.

அவன்ற் கார்ட்­ த­லை­வ­ரான மேஜர் நிசங்க சேனா­தி­பதி அளித்­துள்ள தக­வலின் படி தம்மால் இந்த வருமா­னத்தை 13 மில்­லியன் டொல­ராக அதி­க­ரிக்க முடிந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் 8 பில்­லியன் ரூபாவை வரு­மா­ன­மாகப் பெற்­ற­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இதில், 3 பில்­லியன் ரூபா மட்­டுமே, கடற்­படை மற்றும் ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்­துக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. எஞ்­சிய 5 பில்­லியன் ரூபாவும், அவன்ற் கார்ட்­நி­று­வ­னத்­துக்கே சென்­றுள்­ளது.

இவ்­வா­றான ஒரு வரு­மான மூலத்தை தனி­யா­ரிடம், அதுவும் தனக்கு நெருக்­க­மான நிறு­வ­னத்­திடம் கோத்­தா­பய ராஜ­பக் ஷ ஒப்­ப­டைத்­தது முறை­கே­டான ஒரு விவ­கா­ர­மா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

முழு­வ­ரு­மா­னத்­தையும் கடற்­ப­டையால் பெறக் கூடிய நிலை இருந்த போதிலும், அதனை தனக்கு நெருக்­க­மான முன்னாள் படை அதி­கா­ரி­களைக் கொண்ட நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைத்­தது கேள்­விக்­கு­ரிய விட­யமே.

showImageInStoryஇந்த விட­யத்தில் மட்­டுமே சந்­தேகம் வர­வில்லை.

கடந்­த­வாரம், வர்த்­தக விட­ய­மாக நைஜீ­ரி­யா­வுக்குச் செல்ல அனு­ம­திக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3500 மில்­லியன் ரூபா தமக்கு இழப்பு ஏற்­படும் என்றும் அவன்ற் கார்ட்­நி­று­வ­னத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனா­தி­பதி ஒரு மனுவை நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தி­ருந்தார்.

அதற்கு நீதி­மன்றம் அனு­மதி அளிக்க மறுத்­தி­ருந்­தது.

எதற்­காக அவர் நைஜீ­ரியா செல்ல முயன்றார், அங்கு 3500 மில்­லியன் ரூபாவில் என்ன வர்த்­தக உடன்­பாடு செய்ய வேண்­டி­யி­ருந்­தது என்ற கேள்வி எழுப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

தனியார் கடல் பாது­காப்பு சேவை நிறு­வ­ன­மான அவன்ற் கார்ட்3500 மில்­லியன் ரூபா உடன்­பாடு ஒன்றை, நைஜீ­ரி­யாவில் செய்து கொள்­கி­றது என்றால், அதில் சந்­தே­கத்­துக்­கு­ரிய பல விவ­கா­ரங்கள் இருக்­கவே செய்­கின்­றன.

நைஜீ­ரிய இரா­ணுவம் மற்றும் கடற்­ப­டைக்கு, பாது­காப்பு ரீதி­யான ஆலோ­ச­னை­க­ளையும், வழி­காட்டல்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு அவன்ற் கார்ட்­நி­று­வனம் முயன்­றுள்­ள­தா­கவே தெரி­ய­வ­ரு­கி­றது.

nigerian-girlsகடந்த ஆண்டு நைஜீ­ரி­யாவில் உள்ள கொடூ­ர­மான இல்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­பான போகோ ஹராம் அமைப்­பினால் 200 மாண­விகள் கடத்திச் செல்­லப்­பட்­டது நினை­வி­ருக்­கலாம்.

அது உல­கெங்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய நிகழ்வு.

அதற்குப் பின்னர், கடந்த ஜுன் மாதம், இலங்கை பாது­காப்பு உயர் அதி­கா­ரி­களைக் கொண்ட குழு­வொன்று நைஜீ­ரியா சென்­றி­ருந்­தது.

கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி ஜெனரல் ஜெகத் ஜெய­சூ­ரிய தலை­மை­யி­லான அந்தக் குழுவில் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் தயா ரத்­நா­யக்க, அரச புல­னாய்வுச் சேவையின் தலை­வ­ராக இருந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ரண ஆகி­யோ­ருடன், அவன்ற் கார்ட்­நி­று­வ­னத்தில் முக்­கிய பங்காளர்­க­ளான முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் சோம­தி­லக திஸா­நா­யக்க, மேஜர் நிசங்க சேனா­தி­பதி ஆகி­யோரும் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

இவர்கள், நைஜீ­ரிய கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி எயர் சீவ் மார்ஷல் அலெக்ஸ் படே மற்றும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுடன் நடத்­திய பேச்­சுக்­களின் போது, விடு­தலைப் புலி­களை ஒடுக்க இலங்கைப் படை­யினர் கையாண்ட அனு­ப­வங்­களை நைஜீ­ரி­யா­வுக்கு வழங்க இணக்கம் கண்­டி­ருந்­தனர்.

Terror1அதா­வது போகோ ஹரா­முக்கு எதி­ரான போருக்கு ஆலோ­சனை உத­வி­களை வழங்க இணக்கம் காணப்­பட்­டது.

அதே­போன்று பிரித்­தா­னி­யாவின் கினி­மினி நிறு­வன அதி­கா­ரிகள் இலங்கைப் படை­க­ளுக்கு 1980களின் தொடக்­கத்தில் பயிற்சி மற்றும் ஆலோ­ச­னை­களை வழங்­கி­யது நினை­வி­ருக்­கலாம்.

நைஜீ­ரியா இலங்கைப் படை­களின் ஆலோ­ச­னையை பெறு­வ­தற்கு முடிவு செய்த போது, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் இலங்கை அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­வது போல, அவர்­களின் ஆலோ­ச­னையைப் பெறும் நைஜீ­ரி­யாவும் ஒரு காலத்தில் நெருக்­க­டியை எதிர்­கொள்ள நேரிடும், என்று சர்­வ­தேச நிபு­ணர்கள் எச்­ச­ரித்­தி­ருந்­தனர்.

அர­சாங்க மட்­டத்­தி­லான பேச்­சுக்­களே அப்­போது நடந்­தி­ருந்­தன.

இன்­னொரு நாட்­டுக்கு பாது­காப்பு ஆலோ­ச­னை­களை வழங்­கு­வது வழக்­க­மா­ன­தொரு விடயம் தான்.

ஆனால், அந்த ஆலோ­சனைச் சேவை உடன்­பாடு, அர­சாங்­கத்­திடம் இருந்து அவன்ற் கார்ட்­நி­று­வ­னத்­துக்கு கைமா­றி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அது தான், மேஜர் நிசங்க சேன­தி­பதி நைஜீ­ரி­யாவில் செய்து கொள்­ள­வி­ருந்த 3500 மில்­லியன் ரூபா வர்த்­தக உடன்­ப­டிக்கை.

“அவன்ற் கார்ட்” ­நி­று­வ­னத்தில் முன்னாள் இரா­ணுவ, கடற்­படை, மற்றும் விசேட அதி­ர­டிப்­படை அதி­கா­ரிகள், படை­யினர் தான் பணி­யாற்­று­கின்­றனர்.

மேஜர் நிசங்க சேனா­தி­பதி கொமாண்டா படைப்­பி­ரிவில் முக்­கிய பிர­மு­கர்­களின் பாது­காப்பு பிரிவில் இருந்­தவர்.

அதே­போல, மேஜர் ஜெனரல் கே.பி.எகொ­ட­வெல ஆனை­யி­றவுப் படைத்­தளம் புலி­களால் கைப்­பற்­றப்­பட்ட போது, அதற்குப் பொறுப்பாக இருந்தவர். கடைசி நேரத்தில் அங்கிருந்து படகில் தப்பிச் சென்றவர்.

முல்லைத்தீவு படைத் தளம் புலிகளால் வீழ்த்தப்பட்ட போது அதற்குப் பொறுப்பாக இருந்த (அப்போது கேணல்) மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்னாண்டோவும், இந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய பங்காளர்.

இவ்வாறாக, முன்னாள் படைத்தளபதிகள், அதிகாரிகள், தமது போர் அனுபவங்களையும், வெளிநாடுகளுக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.

இது அரசாங்கத்தின் மூலமே செய்திருக்க வேண்டிய உடன்பாடு. ஆனால், அதை அவன்ற் கார்ட்தனது கைக்குள் போட்டுக் கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் போது, அரசாங்கத்தின் வருமான மூலங்களை தனியாருக்கு கொடுத்து, வருமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு கோத்தாபய ராஜபக் ஷ மீது சுமத்தப்படலாம்.

அது அவரது கைது வரைக்கும் சென்றாலும் ஆச்சரியமில்லை.

ஆனால், அவரைக் கைது செய்வது சிங்கள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்பதாலும், அவருக்கு ஆதரவானவர்கள் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் அதிகம் இருப்பதாலும், கைது விடயத்தில் அரசாங்கம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடனேயே நடந்து கொள்ளும், எதற்கும் அவசரப்படாது என்றே தெரிகிறது.

-சுபத்ரா-

Share.
Leave A Reply