யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில் மண்ணெண்ணெயை குடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒன்றறை வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தாய் விளக்குக்கு ஊற்றுவதற்காக கொண்டு வந்த மண்ணெண்ணெயை சிறுமி குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது சிகிச்சைக்காக சிறுமி யாழ். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும் இவர் பலியாகியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டிதுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் இளைஞன் படுகாயம்
17-03-2015

article_1426575834-IMG1300யாழ்ப்பாணம், அச்சுவேலி அந்தோனியார் தேவாலய முன்றலில் பஸ் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனொருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையை சேர்ந்த வி.ரவீந்திரன் (30) என்பவரே படுகாயமடைந்தார். வீதியொன்றில் திரும்ப முற்பட்ட பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் முதலில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply