நடிகை தப்சி கவர்ச்சியாக நடிப்பதற்கு அண்மை காலமாக மறுத்து வருவதுடன் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

முத்த காட்சிகளில் நடிக்கவும் உடன்பாடு இல்லை என்று கூறும் தப்சி, அது மாதிரி நடிக்க வற்புறுத்தும் திரைப்படங்களை தவிர்ப்பதாக தெரியவருகிறது.

அண்மையில் ஹிந்தி திரைப்படமொன்றில் அவர் நடித்துக் கொண்டு இருந்தபோது வெள்ளை சேலை உடுத்தி மழையில் நனைவது போன்ற காட்சியை எடுக்க இயக்குநர் விரும்பியுள்ளார்.

இதற்காக தப்சியிடம் வெள்ளை சேலை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சேலையை உடுத்திக் கொண்டு நனைந்தால் உடம்பு முழுவதும் தெரிந்து, ஆபாசமாக இருக்கும் என்று கூறி அப்படி நடிக்க தப்சி மறுத்து விட்டாராம்.

இதனையடுத்து சிவப்பு நிற சேலையை கொடுத்தனர். அதை உடுத்திக் கொண்டு மழையில் நனைந்து நடித்துள்ளார்.
தப்சியின் இந்த கவர்ச்சி தடையினால் ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனராம்.

article_1426751811-Tapsee600article_1426752069-Tapseearticle_1426752087-thapsi-kutty

Share.
Leave A Reply