பிரான்ஸில் 150 பேருடன் வீழ்ந்து நொறுங்­கிய, ஜேர்மன் விங்ஸ் நிறு­வன விமா­னத்தின் துணை விமா­னி­யான அன்ரீஸ் லுபிட்ஸின் காதலி கர்ப்­பி­ணி­யாக உள்­ளாரெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த 24 ஆம் திகதி ஸ்பெய்னின் பார்­ஸி­லோனா நக­ரி­லி­ருந்து ஜேர்­ம­னியின் டஸல்டோவ் நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த விமானம் பிரான்ஸில் அல்ப்ஸ் மலைப்­ப­கு­தியில் மோதி நொறுங்­கி­யதால் 144 பய­ணிகள் உட்­பட 150 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

946944விமா­னி­களின் அறை­யி­லி­ருந்து தலைமை விமானி பற்றிக் சோண்டன் ஹெய்மர் வெளியில் சென்­றி­ருந்த போது அவரை மீண்டும் உள்ளே வர­வி­டாமல் கத­வைப் ­பூட்­டி­விட்டு விமா­னத்தை செலுத்­திய 27 வய­தான துணை விமானி, அன்ட்ரீஸ் லுபிட்ஸ் வேண்­டு­மென்றே விமானத்தை சடு­தி­யாக கீழி­றக்கி அல்ப்ஸ் மலைப்­ப­கு­தியில் மோதி­ய­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

germanwings-wrecka_3250218kஜேர்­ம­னி­ய­ரான துணை விமானி அன்ட்ரீஸ் லுபிட்ஸ், இவ்­வா­றான பயங்­கர நட­வ­டிக்­கையை ஏன் மேற்­கொண்டார் என்­பது இன்னும் மர்­ம­மா­க­வுள்­ளது.

அவரின் வீடு மற்றும் பின்­னணி குறித்த தக­வல்­களை ஜேர்மன் புல­னாய்­வா­ளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில் அவர் பற்­றிய பல தக­வல்கள் வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

துணை விமானி அன்ட்ரீஸ் லுபிட்ஸ் யுவதி ஒரு­வரை நீண்­ட­கா­ல­மாக காத­லித்து வந்­துள்ளார். ஆசி­ரி­யை­யாக பணி­யாற்றும் கெத்­தரின் கோல்ட்பாச் என அவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

946945அன்ட்ரீஸ் லுபிட்ஸ் மூலம் கெத்­தரின் கோல்ட்பாச் கர்ப்­ப­ம­டைந்­துள்­ளா­ரென ஜேர்­ம­னிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

கெத்­தரின் கர்ப்­ப­ம­டைந்­தி­ருப்­பதை விமான அனர்த்தம் இடம்­பெ­று­வ­தற்கு இரு வாரங்­க­ளுக்கு முன்­னரே, இந்த ஜோடி கண்­ட­றிந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அன்ட்ரீஸ் லுபிட்ஸின் செயற்­பா­டுகள் கார­ண­மாக அவரின் காதலி கெத்­தரின் அண்­மைக்­கா­ல­மாக அதி­ருப்தி கொண்­டி­ருந்தார் எனவும் கூறப்­ப­டு­கிறது.

946948தனது காதலியான கெத்தரின் என்ன ஆடை அணிய வேண்டும், யாருடன் பேச வேண்டும் என்பது பற்றியெல்லாம் உத்தரவிடுவதற்கு லுபிட்ஸ் முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 7 வரு­டங்­க­ளாக காத­லித்த இந்த ஜோடி­யினர் திரு­மணம் செய்­வ­தற்கு முன்னர் திட்­ட­மி­ட்­டி­ருந்­தனர்.

எனினும் அன்ரீஸ் லுபிட்ஸின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அச்­ச­ம­முற்ற கெத்­தரின், அன்ட்ரீஸ் லுபிட்­ஸி­ட­மி­ருந்து வில­கி­யி­ருந்தார் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

946943சிறு­வ­ய­தி­லி­ருந்தே விமா­னி­யாக வேண்டும் என தீவிர ஆர்வம் கொண்­டி­ருந்­தவர் அன்ட்ரீஸ் லுபிட்ஸ். இதற்­காக பதின்மர் பரு­வத்­தி­லி­ருந்து அவர் தன்னை தயார் படுத்­திக்­கொண்­டி­ருந்தார்.

அவர் இறு­தி­யாக பணி­யாற்­றிய எயார்பஸ் ஏ320 விமா­னத்தை செலுத்­து­வ­தற்குத் தேவை­யான சகல சான்­றி­தழ்­க­ளையும் அவர் பெற்­றி­ருந்தார்.

ஆனால், தனது ஆரோக்­கிய குறை­பா­டு­களை அவர் அதி­கா­ரி­க­ளுக்கு மறைத்­தி­ருந்தார் என நம்­பப்­ப­டு­கி­றது.

அவர் மன அழுத்­தங்­க­ளுக்­காக சிகிச்சை பெற்­றி­ருந்­த­துடன், பார்வை மங்கி வரு­வ­தையும் உணர்ந்­தி­ருந்­தாராம்.

946946தலைமை விமா­னி­யாக பதவி உயர்வு பெற விரும்­பி­யி­ருந்த அன்ட்ரீஸ் லுபிட்­ஸுக்கு இந்த பார்வைக் குறைபாட்டின் காரணமாக விமானி வாழ்க்கையே விரைவில் முடிக்கு வரலாம் என்பதை உணர்ந்திருந்தாராம்.

Share.
Leave A Reply