அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தனக்கு மிகவும் விருப்பமான ‘ஸ்லஷி’ (slushie!) வாங்கும் ஆசையில் நள்ளிரவு வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய 4 வயது சிறுமி, சாலையில் சென்ற பஸ்ஸை கைகாட்டி நிறுத்தி தனியே பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 2713134700000578-0-image-a-54_1427554453381
பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது நள்ளிரவில் வீட்டின் பின் வாசல் கதவு வழியாக வெளியே வந்த அனபெல் என்ற அந்த 4 வயது சிறுமி.
2713136300000578-0-image-a-57_1427554473461
இரவு நேரத்தில் அணியும் பைஜாமா உடையின் மீது ஒரு மழை கோட்டினை அணிந்தவாறு வீட்டின் வெளியே உள்ள சாலையை வந்தடைந்தாள். அவ்வழியே சென்ற பஸ் ஒன்றை கை காட்டி நிறுத்தி, பதற்றமின்றி உள்ளே ஏறினாள்.

kulanthai
நட்டநடு ராத்திரியில் தனியாக ஒரு சிறுமி பஸ்சுக்குள் ஏறுவதை கண்ட சாரதி மிரண்டுப்போனார். எங்கே போக வேண்டும்? என்று கேட்ட கண்டக்டரின் கேள்விக்கு மிரண்டுப்போய் விடாமல், எனக்கு தேவையானது எல்லாம் ஒரேயொரு ‘ஸ்லஷி’ மட்டும்தான் என்று கூலாக பதில் அளித்தார்.

2713138300000578-0-image-a-65_1427554819182(Safe and sound: Annabelle was reunited with her parents, but never actually got her slushie )

உடனடியாக, சாரதி பொலிசுக்கு தகவல் அளிக்க, விரைந்துவந்த பொலிசார் சிறுமியை அருகாமையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்தபடி அவளது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

kulanthaiaaAll I want is a slushie!’: Little Annabelle decided to go on a little adventure in Philadelphia on Friday morning

பெற்றோருடன் அருகாமையில் உள்ள கடைக்கு அடிக்கடி காரில் சென்று ’ஸ்லஷி’ வாங்கி சாப்பிட்ட அனுபவத்தில் நள்ளிரவு நேரம் என்றுகூட கருதாமல் தங்களது மகள் வீட்டில் இருந்து ஓடிவந்து விட்டதாக அவளது பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply