ஈவு இரக்கமே இல்லாமல்  இப்படி ஒரு படுகொலையை அரங்கேற்றி, ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் வெறுப்புணர்ச்சியை சம்பாதித்துக் கொண்டுள்ளது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு.

இது ஆந்திர அரசா அல்லது ஆத்திர அரசா என்று மனம் வெதும்பிக் கேட்கும் வகையில் இருக்கிறது, நாம் பார்க்கும் படங்கள்.

இலங்கையின் முள்ளிவாய்க்காலில்தான் இப்படிப்பட்ட பிணக் குவியலை சமீபத்தில் உலகத் தமிழர்கள் பார்த்தார்கள்.

ஆனால் இன்று தமிழகத்திற்கு அருகில், தலைநகர் சென்னைக்கு அருகில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பரிதாபமாக பிணங்களாகக் கிடக்கும் காட்சிகள் மனதைப் பிசைகின்றன.

08-1428490175-andhra-encounter9757சிங்களர்களை விட மோசம்
இந்தப் பிணங்களைப் பார்த்தால் சிங்களர்களை விடவா ஆந்திர போலீஸார் மோசமானவர்கள் என்ற ஆச்சரியம்தான் வருகிறது.

08-1428490194-andhra-encounter9664என்ன ஒரு கொடுரம்
மிக மிக மோசமான முறையில் நடந்த கொலை போலத்தான் தெரிகிறது ஒவ்வொரு உடலையும் பார்க்கும்போது. பலரின் உடலில் சூட்டுக் காயங்கள். எரிக்க முயன்றிருப்பது தெரிகிறது.

08-1428490212-andhra-encounter989ஆடைகள் இல்லாத நிலையில்
பலரது உடல்களில் முழுமையாக ஆடைகள் இல்லை. பலரது மார்புகளில் குண்டுக் காயங்கள். நிறுத்தி வைத்து நேருக்கு நேர் சுட்டது போல உள்ளது.

08-1428490222-andhra3e545மோசமான தாக்குதல்
இலங்கையில் நடந்த இனவெறித் தாக்குதலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பது போலத் தெரியவில்லை. அவ்வளவு மோசமாக சுட்டுள்ளனர்.

08-1428490203-andhra-encounter966என்ன பெரிய தவறு செய்து விட்டார்கள்
செத்துப் போன அத்தனை பேருமே பெரிய கோடீஸ்வரர்களோ, லட்சாதிபதிகளோ, பண முதலைகளோ இல்லை…மரம் வெட்டி பிழைத்து வந்த சாதாரண கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு இப்படி ஒரு கொடூரமான தண்டனையா…?

08-1428490166-andhra-enc454மனசாட்சிக்குப் பதில் சொல்ல வேண்டும்… நாயுடு
இந்தப் படங்களையெல்லாம் கண்டிப்பாக சந்திரபாபு நாயுடு பார்க்க வேண்டும். அவர் எந்தத் தமிழருக்கும், எந்த அமைப்புக்கும், எந்த கோர்ட்டுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை..

ஆனால் தனது மனசாட்சிக்கு அவர் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும்.

இனமானத் தமிழன் (போலி தமிழ்  தேசிய வாதி) சீமான எங்கே?

Share.
Leave A Reply