இரத்­தி­ன­புரி, கஹ­வத்தை – கொட்­ட­கெ­த­னவில் மர்­ம­மான முறையில் கடந்த சனி­யன்று நள்­ளி­ர­வுக்கு பின்னர் கொலை செய்­யப்­பட்­டி­ருந்த 39 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயின் கொலை தொடர்பில் அவ­ரது 18 வய­து­டைய மகனை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கஹ­வத்தை பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் தலைமையகத்தின் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் இணைந்து நடத்­திய விசேட விசா­ர­ணை­க­ளி­லேயே அவரை கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர  தெரி­வித்தார்.

கடந்த மூன்று நாட்­க­ளாக பொலிஸார் முன்­னெ­டுத்த விசேட விசா­ர­ணையின் பிர­தி­ப­ல­னா­கவே அவரை கைது செய்­த­தா­கவும் சந்­தேகநப­ரான மகன் கொலை தொடர்பில் பொலிஸ் தலை­மை­யக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு விசேட வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­கி­யுள்­ள­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் குறிப்­பிட்டார்.

4145-kotakethana-area-in-kahawatta312884837கொலை செய்­யப்­பட்­டி­ருந்த சந்­தி­ராணி சுவர்­ண­லதா என்ற குறித்த பெண்ணின் இறுதிக் கிரி­யைகள் நேற்று இடம்­பெற்ற நிலை­யி­லேயே இந்த கைது இடம்­பெற்­றுள்­ளது.

முன்­ன­தாக கொட்­ட­கெ­த­னவில் மர்­ம­மான முறையில் கொலை செய்­யப்­பட்ட 39 வய­தான மூன்று பிள்ளை­களில் தாயின் கொலை தொடர்பில் அவ­ரது கண­வ­ரிடம் பொலிஸார் விசேட விசா­ரணை ஒன்றினை மேற்­கொண்­ட­துடன் இளைய சகோ­தரன், மகன், அய­ல­வர்கள் என 40 பேரின் வாக்குமூலங்க­ளையும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் கஹ­வத்தை பொலி­ஸாரும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழான விசேட குழுவும் பதிவு செய்திருந்­தது. இந் நிலை­யி­லேயே நேற்று மாலை இந்த கைது நடவடிக்கை இடம்­பெற்­றுள்­ளது.

இந்த கொலை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலிஸ் தலை­மைய­கத்தின் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எல்.டீ.ரண­வீ­ரவின் கீழ் இடம்­பெற்று வந்த நிலை­யி­லேயே நேற்று இந்த மர்மம் துலக்­கப்­பட்­டது.

kahawattaகடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வீட்டில் தூங்­கிக்­கொண்­டி­ருந்த போது காணாமல் போன சந்­தி­ராணி சுவர்­ண­லதாவின் சடலம் கொட்­ட­கெ­தன நீரோ­டைக்குள் இருந்து மீட்­கப்­பட்­டது.

அவ­ரது சடலம் மீது நேற்று முன் தினம் மேற்­கொள்­ளப்­பட்ட பிரேத பரி­சோ­த­னையில் அவ­ரது உடலில் 6 பலத்த வெட்­டுக்­கா­யங்கள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அத்­துடன் தலையில் கூரிய ஆயு­தத்தால் தாக்­கி­யதில் மண்டை ஓடு சுக்­கு­நூ­றா­னதில் மரணம் சம்பவித்­த­தாக தெரி­ய­வந்­தது.

இந் நிலையில் அந்த பெண்ணை படு­கொலை செய்த சந்­தேக நபர்கள் கைவிரல் ரேகை, டீ.என்.ஏ.மூலக் கூறு­களை அழிக்கும் வித­மாக அவ­ரது சட­லத்தை கொட்­ட­கெ­தன நீரோடைக்குள் போட்டி­ருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கித்­த­துடன் கொலையை செய்ய தனி நபர் ஒரு­வரை விட ஒரு குழு அல்­லது இருவர் தொடர்பு பட்­டி­ருக்க வேண்டும் எனவும் சட­லத்தை வீட்­டி­லி­ருந்து நீரோ­டை­வரை கொண்டு செல்ல முச்­சக்­கர வண்­டி­யொன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் எனவும் ஊகித்­தனர்.

இதன் படி விரி­வான விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே நேற்று மாலை குறித்த மகன் கைது செய்­யப்­பட்டார்.

அவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் அவர் கேட்ட 1500 ரூபாவை தாய் கொடுக்க மறுத்­ததன் விளை­வாக இந்த கொலை இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக தக­வல்கள் குறிப்­பிட்­டன. எனினும் கொலைக்கான காரணம் நேற்று நள்­ளி­ரவு வரை பொலி­ஸாரால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

பெண் கொலை செய்­யப்­பட்ட சம­யத்தில் வீட்டில் அவ­ரது 18 வயது மகன் மாத்­தி­ரமே இருந்­துள்ளார். கொலை செய்யப்பட்ட 32 வயதான சந்திராணி சுவர்ணலதா என்ற பெண்ணின் சடலம் கொட்டகெதன பகுதி ஓடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இக்கொலை தொடர்பில் விசாரணைக் குழுவினர் பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

Share.
Leave A Reply