அம்மா என்றால் அத்தனை பேருக்கும் உயிர்தான். ஆனால், அந்த உயிரை குழந்தைகளாக இருந்த போது நாம் எப்படி அடையாளம் கண்டோம்?. அவளைத் தொட்டு உணரும் ஸ்பரிசத்தால் தானே!!,

எப்படியோ, வளர வளர அம்மாவுக்கென்று பிரத்தியேகமாக இருந்த வாசனையை, தொடு உணர்வை, அவளது ஸ்பரிசத்தை நாம் தவறவிட்டு விட்டோம்.

இப்படி நாம் தவறவிட்ட சில அற்புதங்களை நமக்கு நினைவூட்டி நம்மை நேசத்தால் திக்கு முக்காடச் செய்வதாலே ’தி யுனிக் கனெக்சன்’ என்ற வீடியோவை, வெளியான இரண்டு வாரத்திற்குள் யூ-டியூபில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து நெகிழ்ந்துள்ளனர்.

பதட்டமும் பரவசமும் ஒன்று சேர்ந்த ஒரு கலவையான உணர்ச்சியில் 6 அம்மாக்கள் நின்று கொண்டிருக்க, கண்கள் கட்டப்பட்டிருக்கும் அவர்களின் குழந்தைகள், ஒவ்வொருவராக வந்து ஒவ்வொரு அம்மாவின் முகத்தையும் தொட்டுப்பார்த்து,  தன் அம்மாவை, உணர்ந்து கட்டி கொள்ளும் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, என்பதை உணர்ந்தே கீழே அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply