இரு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்ட பெண் பசியைத் தணிவிக்க பொலித்தீனை உண்ட கொடுமை

பெண்­ணொ­ருவர் இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக குடும்­ப­மொன்றால் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கழுத்தில் சங்­கி­லியால் கட்­டப்­பட்டு அடி­மை­யாக நடத்­தப்­பட்­ட­துடன், தனது பசியை தணி­விக்க துணிகளை சுற்றப் பயன்­பட்ட பொலித்தீன் உறை­களை உண்டு வந்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் பிரேசிலில் இடம்­பெற்­றுள்­ளது.

sunthariசுந்­துரி என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் மேற்­படி பெண் தன்னை அடி­மை­யாக நடத்தி வந்த குடும்­பத்­தி­ட­மி­ருந்து தப்பி வந்து பொலி­ஸா­ரிடம் தஞ்­ச­ம­டைந்­த­தை­ய­டுத்தே அவ­ருக்கு நேர்ந்த கொடுமை அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

VID Abused  Woman Escapes Slavery In Mexico
இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தொழில் வாய்ப்பைப் பெறும் முக­மாக மெக்­ஸிக்­கோவின் தலை­ந­கரில் வசிக்கும் சலவைத் தொழிலில் ஈடு­பட்டு வந்த குறிப்­பிட்ட குடும்­பத்தை அணு­கிய அந்தப் பெண் (22 வயது), உடை­களை இஸ்­தி­ரிகை செய்யும் பணிக்கு அந்தக் குடும்­பத்­தி­னரால் அமர்த்­தப்­பட்டார்.

VID Abused  Woman Escapes Slavery In Mexico
ஆரம்­பத்தில் அவ­ருக்கு தங்­கு­வ­தற்­கான இடம் மற்றும் ஊதி­யத்தை வழங்­கிய அந்தக் குடும்­பத்­தினர், அவர் திருட்டில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்டுக்கு ஆளா­ன­தை­ய­டுத்து அவ­ருக்கு ஊதியம் வழங்­கு­வதை நிறுத்­தி­ய­துடன் அவரைக் கட்டிவைத்து அடித்து உதைத்து கொடு­மைப்­ப­டுத்த ஆரம்­பித்­தனர்.

அவ­ருக்கு ஒரு நேர உணவை மட்­டுமே வழங்­கிய அந்தக் குடும்­பத்­தினர், அவரை ஊதி­ய­மின்றி தின­சரி 12 மணி நேரம் உடை­களை இஸ்­தி­ரிகை செய்யும் பணியில் ஈடு­ப­டுத்தி வந்­துள்­ளனர்.

இது தொடர்பில் சுந்­துரி விப­ரிக்­கையில், தன்னை அந்தக் குடும்­பத்­தினர் அடித்து உதைத்­த­துடன் இரும்பால் சூடுவைத்துக் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்தார்.

சில சம­யங்­களில் பசிக்கொடு­மையால் வயிற்றை நிரப்ப துணி­களை சுற்­றி­யுள்ள பொலித்­தீன்­களை உண்ண நேர்ந்­த­தாக அவர் கூறினார்.

VID Abused  Woman Escapes Slavery In Mexicoஇந்­நி­லையில் சம்­பவ தினம் அவ­ரது கழுத்தைக் கட்­டி­யி­ருந்த சங்­கிலி தற்­செ­ய­லாக சரி­யாகக் கட்டப்படா­ததால்  இந்த சங்­கி­லி­யி­லி­ருந்து தன்னை விடு­வித்து தப்பி வந்­த­தாக அவர் தெரிவித்தார்.

சங்­கி­லியால் கழுத்தில் கட்­டப்­பட்­டதால் சுந்­து­ரியின் கழுத்தில் மோச­மான காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. அத்­துடன் அவ­ரது உடல் முழு­வதும் அடி காயங்­களும் தீயால் சுட்ட காயங்­களும் காணப்­பட்­டன.

அது­மட்­டு­மல்­லாது போஷாக்­கின்­மையால் கடும் குரு­திச்­சோ­கையால் பாதிக்­கப்­பட்டு வயோ­திப பெண் போன்ற தோற்­றத்தில் அவர் காணப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக சிகிச்­சைக்­காக மெக்­ஸிக்­கோவின் தலை­ந­க­ரி­லுள்ள மருத்துவமனையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் சுந்­து­ரியைக் கொடுமைப்ப டுத்திய குடும்பத்தைச் சேர்ந்த ஜெனட் ஹெர்னாண்டஸ், மொலினா, ஜோஸ் டி ஜீஸஸ் ஆகியோர் உள்ளடங்கலாக ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

sunthari-2Left to right: Leticia Molina Ochoa, her sister Fany Molina Ochoa and Ivette Hernandez Molina have all been detained on suspicion of holding Zunduri against her wil.  annet Hernandez Molina (left) and Jose de Jesus Sanchez Vega have also both been arrested by police

sunthari -1

அவர்கள் 40 வரு­டத்­திற்கு மேற்­பட்ட சிறைத்­தண்­ட­னையை எதிர்­கொண்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply