தனது 13 வயது மகளை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கீரிமலை சேந்தாங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரை திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கே.அக்ஷா (வயது 13) என்ற சிறுமி படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற தந்தை மகளை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்;. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.