வீடு, மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் திரு­மணம் செய்­து­கொள்ள ஒரு பெண்ணும் வழங்­கும்­படி கோரி அதி­சக்தி வாய்ந்த மின் கம்­பத் தில் ஏறி போராட்டம் செய்த 26 வய­தான இளை­ஞ­ரொ­ரு­வரை பிரதே­ச­வா­சிகள் பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் பிடித்து திக்­வெல்ல பொலி­ஸா­ரிடம் ஒப்படைத்துள்ளனர்.

9990Untitled-1இந்த இளை­ஞரை மாத்­தளை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­ பின்னர் மன­நல வைத்­தி­யரின் அறிக்கை யொன்றை பெற்று நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கும்­படி நீதிவான் உத்­த­விட்­டுள்ளார்.

திக்­வெல்ல ரத்­மலே வீதிச் சந்­தி­யி­லுன்ன சக்­தி­வாய்ந்த மின்­கம்­பத்தில் ஏறி மின்­கம்­பி­க­ளுக்­கி­டையே அமர்ந்­தி­ருந்த இளை­ஞரைப் பார்த்த பிர­தே­ச­வா­சிகள் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

இதன் பின்னர் மின்­சா­ர­ச­பைக்கு அறி­விக்­கப்­பட்டு மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன் பின்னர் இளை­ஞனை கீழே இறக்­கு­வ­தற்­காகச் சென்ற நப­ரொ­ரு­வரை இந்த இளைஞன் தாக்­கி­யுள்ளான்.

பின்னர் மின்­கம்­பியில் தொங்கி அரு­கி­லுள்ள வேப்ப மரத்­துக்குச் செல்ல முயற்­சித்த இந்த இளைஞன் கீழே வீழ்ந்­துள்ளான்.

காய­முற்ற இளைஞன் அந்த நிலை­யிலும் அரு­கி­லுள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்­காய்­களைப் பறித்து அரு­கி­லுள்­ள­வர்கள் மீது எறித்­துள்ளார்.

பின்னர் பிரதேசவாசிகள் ஒன்றுதிரண்டு இரவு 8.00 மணியளவில் இளைஞரை கீழே இறக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share.
Leave A Reply