அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் முன் குழந்தை ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அந்த குட்டிப்பெண்ணின் பெயர் க்ளாடியா. கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த வருடாந்திர விழாவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று டுவிட்டர் வாசிகள் கருதுகின்றனர்.

இந்த புகைப்படத்தின் சிறப்பம்சம் ஒபாமாவின் ரியாக்‌ஷன்தான். ”நான் எதையெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாத்தீங்களா?” என்று கேட்பது போன்ற அவரது முகத்தோற்றம், இந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்களை தன்னை மறந்து சிரிக்க வைத்து விடுகிறது.

இதனால், க்ளாடியா இப்போது இணையத்தின் ஹிட் பேபியாகியுள்ளார்.

605807016Untitled-1

Share.
Leave A Reply