யாழ். மாவட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்கு கட்­டணம் நிர்­ணயம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை யாழ். அர­சாங்க அதிபர் மேற்­கொண்­டுள்­ள­துடன் கட்­டண விப­ரங்­களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்­கான கட்­ட­ணத்தில் முதல் கிலோ மீற்­ற­ருக்கு 70 ரூபாவும் இரண்­டா­வது கிலோ மீற்றர் தொடக்கம் பத்­தா­வது கிலோ மீற்றர் வரை ஒவ்­வொரு கிலோ மீற்றருக்கும் 43 ரூபாவும் பத்­தா­வது கிலோ மீற்­ற­ருக்கு அப்பால் ஒவ்­வொரு கிலோ மீற்­ற­ருக்கும் 34 ரூபாவும் அற­விட வேண்டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முச்­சக்­க­ர­வண்டி தொடர்­பாக வரை­யறை இல்லை என்றும் முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப  கட்­ட­ணங்­களை   அற­வீடு செய்து பொது­மக்­க­ளோடு முரண்­ப­டு­வது தொடர்பாகவும் கிடைக்கப்­பெற்ற முறைப்­பா­டு­களையடுத்து யாழ். மாவட்ட அர­சாங்க அதி­பரின் பணிப்பு­ரைக்கு அமைய மாவட்ட விலைக்­கட்­டுப்­பாட்டு சபை­யினால் கட்­டண நிர்­ணயம் செய்யப்­பட்டு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் பொது­வான சீருடை அணிய வேண்டும். முச்­சக்­க­ர ­வண்­டி­களின் தூரத்தை அறிந்து கொள்­வ­தற்கு மீற்றர் பொருத்த வேண்டும்.

ஓட்­டு­நர்கள் தமது ஆள் அடையாளத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் சார­தி­க­ளுக்­கான அடை­யாள அட்­டையை அணிந்து கொள்ள வேண்டும்.

முச்­சக்­க­ர­வண்டி தரிப்­பி­டத்தில் சேவைக்­கென நிறுத்­தப்­பட்­டி­ருக்கும் வண்­டி­களின் இலக்­கங்கள் பொது­மக்கள் பார்­வைக்கு ஏற்­பு­டைய முறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்­படி ஒழுங்கு முறையை அனு­ச­ரிக்­காமல் நடந்து கொள்வோர் மீது மேல் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

Share.
Leave A Reply