முத்தம் காரணமாக மணப் பெண் தனது திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் உள்ள நாகலா கைர்பந்த் கிராமத்தைச் சேர்ந்த ருச்சி என்ற பெண்ணுக்கும் ஜைதாராவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.
திருமணத்தன்று மாப்பிள்ளை ஊர்வலம் பெண் வீட்டுக்கு வந்தது. அப்போது மணமகனின் தந்தை பாபுராம் ருச்சியின் ஒன்றுவிட்ட சகோதரியை திடீரென முத்தமிட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ருச்சி ஒழுக்கமில்லாத குடும்பத்தில் வாழ விரும்பவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். பாபுராம் மன்னிப்பு கேட்டும் ருச்சி திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை ஒரு இடத்தில் அடைத்துவைத்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆயினும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத பெண் வீட்டார் பரிசுப்பொருட்கள் மற்றும் திருமண செலவு ரூ.27 ஆயிரத்து 900 ரூபாவை மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்