திரு­மணம் நடை­பெறும் இடத்­திற்கு குதிரை வண்­டி­க­ளிலோ அலங்­கார ஊர்­தி­க­ளிலோ தாம் அழைத்து வரப்­ப­டு­வ­தையே மிகச் சிறந்த வழி­மு­றை­யாக மேற்­கு­லக நாடு­களைச் சேர்ந்த மண­ம­கள்மார் கரு­து­வது வழமை.

ஆனால் பிரித்­தா­னிய வேல்ஸை சேர்ந்த ஜெனி பக்லெப் (58 வயது) என்ற மண­ம­களோ தனது திரு­மணத் தின் போது திரு­மணம் நடை­பெறும் இடத்­திற்கு சவப்­பெட்­டி­யொன்றில் வந்­தி­றங்கி அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்ளார்.

wedding-s

கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்தத் திரு­மணம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஜெனி பயணம் செய்த சவப்­பெட்­டி­யா­னது அறு­வடை இயந்­தி­ரத்­துடன் இணைக்­கப்­பட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றால் இழுத்துச் செல்­லப்­பட்­டது.

மோட்டார் சைக்கிள் அபி­மா­னி­யான தனது சகோ­தரர் ரொஜரை கௌர­வப்­ப­டுத்தும் வகை­யி­லேயே ஜெனி இவ்­வாறு விநோ­த­மான முறையில் திரு­மணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.

மண்­டை­யோ­டுகள் மற்றும் எலும்­புக்­கூ­டுகள் என்­ப­வற்றில் ஆர்வம் காட்டி வந்த ரொஜர், அத்­த­கைய வடி­வ­மைப்­பு­களைக் கொண்ட பொருட்­களை அலங்­காரப் பொருட்­க­ளாக சேக­ரிப்­பதில் ஈடு­பட்டு வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரொஜர் பயணம் செய்ய முடி­யாத நிலையில் கடும் சுக­யீன­முற்­றி­ருந்­ததால் அவர் வசித்த இடத்­திற்கு அரு­கி­லேயே ஜெனியின் திரு­மணம் இடம்­பெற்­றது.

முதலில் ரொஜரே சவப்­பெட்­டி­யு­ட­னான அறு­வடை இயந்­தி­ரத்தை இழுத்து வரும் மோட்டார் சைக்­கிளை செலுத்­து­வ­தாக இருந்­தது. எனினும் அவ­ரது மோச­மான உடல் நிலை கார­ண­மாக அவ­ரது மனைவி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்­டி­ருந்தார்.

wedding-kd

ஜெனி தனது சவப்­பெட்­டியில் திரு­மணம் நடை­பெறும் இடத்­திற்கு வரும் திட்­டத்தை மண­ம­க­னான கிறிஸ்­தோப்பர் லொக்­கெட்­டிற்கு (51 வயது) கூட தெரி­விக்­காது இர­க­சி­ய­மாக வைத்­தி­ருந்­துள்ளார்.

இதன் காரணமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்ட சவப்பெட்டியில் ஜெனி இருப்பதைக் கண்டதும் மணமகன் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply