பறந்து கொண்டே படமெடுக்க பயன்படும் சிறிய , இலகுரக விமானமொன்று (Drone) அஹங்கமவில் , வீடொன்றின் காணியில் விழுந்துள்ளது.

நேற்று மாலை நேரமே குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவ் விமானம் பொலிஸாரின் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தூரத்தில் இருந்து கட்டுப்பாட்டுக் கருவியின் மூலம் இயக்கக் கூடிய இத்தகைய  சிறிய விமானம் ‘ட்ரோன்’ என அழைக்கப்படுகின்றது. இவை கமெராவையும் கொண்டுள்ளது.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இத்தகைய விமானத்தை யார் உபயோகித்தனர் மற்றும் அதில் பதிவாகியிருந்த காணொளி தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply