கடந்த வருட இறுதி வரையில் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், அவர்களின் அலுவலக ஊழியர்கள், அரச திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய 164 நிறுவனங்களில் பயன்படுத்திய வாகனங்களின் முழு பெறுமதி 7 ஆயிரத்து 380 கோடி ஆகும்.

அவற்றில் 806 கோடி பெறுமதியான வாகனங்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாகன கையிருப்புக்களில் 164 நிறுவன வாகனங்கள் ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளன.

இது மொத்த தொகையில் 10.2 சதவீதமாகும். இவை ஜனாதிபதியின் வாகனம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் வாகனம், பாதுகாப்பு அமைச்சரின் வாகனம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் வாகனம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வாகனம், சட்டமும் ஒழுங்கும் அமைச்சரின் வாகனம் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் வாகன கையிருப்புக்களாகும்.

இவ்வளவு பாரிய பெறுமதியுடைய வாகன கையிருப்புக்கள் ராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்காக மாத்திரமே காணப்பட்டுள்ளன.

குறித்த அமைச்சுக்களின் கீழ் காணப்படுவது அரச திணைக்கள வாகனங்கள் அல்லவாம். என இன்றைய அரச கூடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (ஸ)

Share.
Leave A Reply