மும்­பையில் விஷச்­சா­ரா­யத்­துக்கு பலி­யா­னோரின் எண்­ணிக்கை 90 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக 8 பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் 4 கலால் அதி­கா­ரிகள் பணி­யிடை நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மும்பை மலாடு மேற்கு லட்­சு­மி­நகர் குடிசை பகு­தியைச் சேர்ந்த கூலி தொழி­லா­ளிகள், கடந்த 17ஆம் திகதி இரவு அப்­ப­கு­தியில் விற்­பனை செய்­யப்­பட்ட சாரா­யத்தை வாங்கி குடித்­துள்­ளனர்.

சாராயம் குடித்த சில நிமி­டங்­களில் அவர்­க­ளுக்கு வாந்தி மயக்கம் ஏற்­பட்­டுள்­ளது. பெரும்­பா­லானோர் வயிற்று வலி, நெஞ்சு வலி ஏற்­பட்டு சுருண்டு விழுந்­துள்­ளனர்.

உட­ன­டி­யாக அவர்கள் அனை­வரும் அருகில் உள்ள மருத்­து­வ­ம­னையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டனர். பரி­சோ­த­னையில் அவர்கள் குடித்த சாரா­யத்தில் விஷத்­தன்மை இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது.

relatives-of-victims-at-the-diamond-harbour-hospital-after-102-died-drinking-boot-leg-liquor-pic-getty-538370902இந் நிலையில், மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்­று­வந்த 13 பேர் அன்­றைய தினமே பரி­தா­ப­மாக உயிரிழந்தனர்.

மேலும், தொடர்ந்து உயி­ரி­ழப்­புகள் அதி­க­ரித்த வண்ணம் உள்­ளன.நேற்று காலை­வரை 90 ற்கும் மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்த சம்­பவம் நாடு முழு­வதும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யதை தொடர்ந்து, இதில் தொடர்­பு­டைய சிலரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

அத்­தோடு விஷச்­சா­ராயம் விற்­ப­னைக்கு துணை­போன மால்­வாணி உயர் பொலிஸ் அதி­காரி பிரகாஷ் பாட்டீல், துணை­பொலிஸ் அதிகாரி சங்கர் கார்கே உள்ளிட்ட 8 பொலிஸாரை பணியிடை நீக்கம் செய்து மும்பை பொலிஸ் ஆணையாளர் ராகேஷ் மரியா உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply