ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களின் தங்க நகைகளை அபகரிக்க முற்பட்ட இரு யுவதிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இறுதி நாளான இன்று (24) மதியம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

பூஜை வழிபாட்டின் போது, தென் பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படும் இரு இளம் யுவதிகள் ஆயலத்திற்கு வருகை தந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியினை அபகரிக்க முற்பட்டுள்ளார்.

அவ்வேளை, ஏனைய அடியார்களால் இரு யுவதிகளும் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட வட்டுக்கோட்டை பொலிசார் ஆலய முன்றலில் இரு யுவதிகளையும் கை விலங்கிட்டு, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசாரனைகளை மேற்கொள்ள அழைத்ததுச் சென்றனர்.

பொலிஸார் இரு யுவதிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன

Share.
Leave A Reply