அமெ­ரிக்­காவின் தென்­மேற்கு மூலையில் அமைந்­துள்ள சவுத் கரோ­லினா மாநிலம். அங்கு கறுப்­பர்கள் செறிந்து வாழும் சார்ள்டன் நகர். அதி­லுள்ள ஆபி­ரிக்­க-­ – அ­மெ­ரிக்க மெத்­தோடிஸ்ட் தேவா­ல­யத்தில் பைபிள் கூட்டம் நடை­பெ­று­கி­றது.

மதப்­போ­தகர் அடங்­க­லாக 13 பேர் வரை அமர்ந்­தி­ருந்­தி­ருக்­கி­றார்கள். அநே­க­மாக எல்­லாரும் கறுப்­பி­னத்­த­வர்கள், ஒரு­வரைத் தவிர. மதப் போதகர் விவி­லி­யத்தின் பெரு­மை­களை விப­ரிக்­கிறார். கடி­கார முட்கள் சுழல்­கின்­றன. ஒரு மணித்­தி­யாலம் வரை கழி­கி­றது.

கறுப்புத் தோல் உள்­ள­வர்­க­ளுடன் அமர்ந்­தி­ருந்த வெள்­ளைத்தோல் இளைஞன் இடுப்பில் சொரு­கி­யி­ருந்த துப்பாக்­கியை எடுக்­கிறான்.

ஒவ்­வொ­ரு­வ­ராக சுட்டுத் தள்­ளு­கின்றான். தோட்­டாக்கள் தீர்­கின்­றன. மீண்டும் துப்­பாக்­கியில் தோட்­டாக்­களை நிரப்­பு­கிறான்.

கட­வுளின் ஆணையால் துப்­பாக்­கியைக் கீழே போடு என்று தம்மை நோக்கி இறைஞ்சும் பெண்­ம­ணியைப் பார்க்­கிறேன்.

நான் இதைச் செய்தே ஆக வேண்டும் என்­கிறான். எங்கள் பெண்­களை நீங்கள் கற்­ப­ழிக்­கி­றீர்கள், எமது நாட்டை ஆக்­கி­ர­மிக்­கி­றீர்கள் என்று கூறிக் கொண்டு மீண்டும் மற்­ற­வர்­களை நோக்கி துப்­பாக்­கியை நீட்­டு­கிறான்.

charleston-shootin_3346737kதேவா­ல­யத்தில் திரண்­டி­ருந்த ஒன்­பது பேர் இரத்த வெள்­ளத்­துடன் வேரற்ற மர­மாக நிலத்தில் விழுகிறார்கள். ஆயு­த­பாணி ஒரு பெண்ணை தப்­பிக்க விடு­கிறான்.

இங்கே நடந்­ததை மற்­ற­வர்­க­ளிடம் சென்று சொல் என்று கட்­ட­ளை­யி­டு­கிறான். தொடர்ந்து, தேவா­ல­யத்தை விட்டு வெளி­யேறிச் செல்­கிறான்.

இது கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம். துப்­பாக்கி கலா­சாரம் தீவி­ர­மாக பர­வி­யுள்ள அமெ­ரிக்க சமூ­கத்தில், இது பத்­தோடு பதி­னொன்­றா­வது சம்­ப­வ­மாக இருக்­கலாம்.

வயிற்றுப் பசி தீர்க்க பல்­பொருள் அங்­கா­டியைக் கொள்­ளை­யிடும் சந்­தர்ப்­பத்தில் அடுத்­த­வனை சுட்டுத் தள்ளும் திரு­டனை விட்டு விடலாம். கோஷ்டி மோதலில் பழி­வாங்கும் உணர்ச்சி மேலிட அடுத்­த­வனின் நெஞ்சில் குறி­வைக்கும் இளை­ஞ­னையும் மறந்து விடலாம்.

பாட­சாலை சென்று சக மாண­வர்­க­ளையும் ஆசி­ரி­ய­ரையும் போட்டுத் தள்ளி விட்டு, தம்மைப் பாதித்த மன அழுத்தம் துப்­பாக்­கியைப் பிர­யோ­கிக்க தூண்­டி­யது என்று தயக்­க­மின்றி கூறும் மாண­வர்கள்.

தமக்குப் பயந்து ஓடிச் செல்லும் கறுப்­பின இளை­ஞரை துப்­பாக்­கியால் சுட்டுத் தள்ளி விட்டு, கட­மையைச் செய்தேன் என்று கொலையை நியா­யப்­ப­டுத்தும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள்.

இது­போன்று வன்­முறை மலிந்த அமெ­ரிக்க சமூ­கத்தில், சார்ள்ஸ்ட்ன் தேவா­லய துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தை இன்­னொருவன்­மு­றை­யென மறந்து விட முடி­யாது.

இந்தச் சம்­பவம், ஒரு சமூகம் இன்­னொரு சமூ­கத்தின் மீது கொண்­டுள்ள தீவிர வெறுப்­பு­ணர்ச்­சியின் வெளிப்­பா­டாக அமைந்­தி­ருப்­பது இதற்குக் கார­ண­மாகும்.

மத வழி­பாட்­டுக்­காக ஒன்­று­கூ­டிய அடி­யார்­களை தேவா­ல­யத்­திற்குள் சுட்டுக் கொன்ற இளை­ஞனின் மனோ­நிலை. சவுத் கரோ­லினா மாநி­லத்தின் வர­லாறு. இவை இரண்­டையும் சற்று ஆழ­மாக ஆராய்ந்தால், இதனை இல­கு­வாகப் புரிந்து கொள்ள முடியும்.

பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ள டிலான் ரூஃப் என்ற 21 வய­து­டைய இளைஞன். இவன் தேவா­ல­யத்தில் நடந்து கொண்­ட­தாகக் கூறப்­பட்ட விதமும், உச்­ச­ரித்­த­தாகக் கூறப்­படும் வார்த்­தை­களும் போதும். இவனின் வெள்­ளை­யின மேலா­திக்க சிந்­த­னையைத் தெளி­வாகப் புரிந்து கொள்ள முடியும்.

தனது பேஸ்புக் கணக்கில் டிலான் சேர்த்­துள்ள புகைப்­படம், வெள்­ளை­யின மேலா­திக்க சிந்­தனை எந்­த­ள­விற்கு நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதைக் காட்­டு­கி­றது.

Charleston_shootin_3346064kஇந்தப் புகைப்­ப­டத்தில் டிலான் அணிந்­துள்ள மேலங்­கியை உன்­னிப்­பாக அவ­தா­னித்தால் இரு கொடி­களைக் காணலாம்.

இங்­குள்ள இரு கொடி­களும் இரு ஆபி­ரிக்க நாடு­களை வெள்­ளை­யர்கள் ஆட்சி செய்த காலப்­ப­கு­தியில் பயன்படுத்­தப்­பட்­ட­வை­யாகும். ஒரு கொடி தென்­னா­பி­ரிக்­கா­வுடன் சம்­பந்­தப்­பட்­டது. மற்­றைய கொடி சமகாலத்தில் ஸிம்­பாப்வே என்­ற­ழைக்­கப்­படும் ரொடீ­ஸி­யா­வுடன் தொடர்­பு­டை­யது.

தென்­னா­பி­ரிக்­காவில் வெள்­ளை­யர்கள் கறுப்­பர்­களை ஒதுக்கித் தள்­ளிய ஆட்சி முறைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ள­துடன், ஸிம்­பாப்­வேயும் வெள்­ளை­யர்­களின் பிடியில் இருந்து சுதந்­திரம் பெற்­றுள்­ளது.

இருந்­த­போ­திலும், வெள்­ளை­யர்­களின் மேலா­திக்­கத்தை நிலை­நாட்ட விரும்பும் அமெ­ரிக்க அமைப்­புக்கள் கறுப்­பர்கள் மீதான அடக்­கு­மு­றையின் குறி­யீ­டாக முன்­னைய கொடி­களைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்தக் கொடிகள் பொறிக்­கப்­பட்ட மேலங்கி, எவ்­வாறு டிலா­னுக்குக் கிடைத்­தது என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாகும்.

Charleston_shootin_3346192k

21-year-old Dylann Roof,

அமெ­ரிக்­காவின் சவுத் கரோ­லினா மாநி­லத்தில், வெள்­ளை­யர்­களின் மேலா­திக்­கத்­திற்­காக போராடும் 16 அமைப்­புக்கள் இயங்­கு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவற்­றுடன் டிலான் எத்­த­கைய தொடர்­பு­களைக் கொண்டி­ருந்தார் என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை.

இருந்­த­போ­திலும், தென் கரோ­லினா மாநி­லத்தில் தீவி­ர­மாக பர­வி­யி­ருக்கும் வெள்­ளை­யின மேலா­திக்க சிந்தனை, டிலா­னுக்கு உந்­து­சக்­தி­யாக அமைந்­தி­ருக்­கலாம் என்­பதை நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள்.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், இன­வா­தமும், மேலா­திக்க சிந்­த­னையும் செறிந்த மாநி­லங்­களில் ஒன்­றாக சவுத் கரோ­லினா (South Carolina) கரு­தப்­ப­டு­கி­றது.

ஆபி­ரஹாம் லிங்கன் அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டு ஒரு மாதம் கழி­வ­தற்குள், அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்லக் கோரும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றிய மாநிலம் இது­வாகும்.

அமெ­ரிக்­கா­வுடன் தொடர்ந்தும் இணைந்­தி­ருக்கும் பட்­சத்தில், கறுப்­பி­னத்­த­வர்­களை அடி­மை­க­ளாக அடக்கியொடுக்கும் ஆட்­சி­முறையைப் பேண முடி­யாது என்­பதால், தாம் பிரிந்து செல்­வ­தாக சவுத் கரோ­லி­னாவின் மேலா­திக்க சிந்­த­னை­யா­ளர்கள் கூறி­னார்கள்.

அத்­த­கைய சிந்­த­னையின் தொடர்ச்சி, தென் கரோ­லி­னாவில் இன்­னமும் நிழ­லா­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­ற­தென மனித உரிமை அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

இந்த சிந்­த­னை­களை பரப்பும் அமைப்­புக்­களில் ‘கூ குளுஸ் கிலான் (கேகேகே)’ என்ற இயக்கம் முக்­கி­ய­மா­னது. சரி­யாக 52 வரு­டங்­க­ளுக்கு முன்னர், கறுப்­பி­னத்­த­வர்கள் வழி­படும் கிறிஸ்­தவ தேவா­ல­ய­மொன்றில் கேகேகே நடத்­திய தாக்­கு­தலில் நான்கு சிறு­மிகள் கொல்­லப்­பட்­டி­ருந்­ததை ஞாப­கப்­ப­டுத்­தலாம்.

கேகேகே என்­பது முக­மூடி அணிந்து கறுப்­பர்­களைத் தாக்கும் அமைப்­பாக வளர்ச்சி கண்­ட­போ­திலும், அதன் வழியைப் பின்­பற்றி நேர­டி­யாக கறுப்­பர்­களை விமர்­சிக்கும் பல அமைப்­புக்கள் சவுத் கரோ­லி­யாவில் தலைதூக்கி­யி­ருப்­பதைக் காணலாம்.

சம­கால அமெ­ரிக்க சமூ­கத்தில் கறுப்­பி­னத்­த­வர்கள் அதிக அனு­கூ­லங்­களைப் பெற்று வரு­கி­றார்கள் என்ற பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

*இத்­த­கைய நிலை­மையை தவிர்க்க வேண்­டு­மானால், கேகேகே உடன் இணைந்து கொள்­ளு­மாறு சவூத் கரோலினா மாநி­லத்­தி­லுள்ள வெள்­ளை­யர்­களை வலி­யு­றுத்தும் துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் சமீ­பத்­திலும் விநி­யோ­கிக்­கப்­பட்­டதை அமெ­ரிக்க ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

இந்த வெள்­ளை­யின மேலா­திக்க சிந்­த­னையின் விளை­வுகள் பார­தூ­ர­மா­னவை. கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் வோல்ட்டர் ஸ்கொட் என்ற நிரா­யு­த­பாணி கறுப்­பின இளை­ஞனை சுட்­டுக்­கொன்ற சம்ப­வத்தை நினை­வு­கூர முடியும்.

இந்த சம்­பவம் சவுத் கரோ­லினா மாநி­லத்தில் வெள்­ளை­யின மேலா­திக்க சிந்­தனை எந்­த­ளவு நிறுவனமயப்படுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­தாக அமைந்­தது.

இங்கு முக்­கி­ய­மான விடயம் யாதெனில், இத்­த­கைய சம்­ப­வங்­களை அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கையாளும் விதம் தான்.

மேலா­திக்க சிந்­தனை நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்தில் வெள்­ளை­யின சமூ­கத்தைச் சேர்ந்த மனிதர் மத வழி­பாட்டுத் தலத்தில் கறுப்­பின சமூ­கத்தைச் சேர்ந்த ஒன்­பது பேரை சுட்டுக் கொல்லும் சம­யத்தில், அது வெறுப்­பு­ணர்வில் செய்த குற்­றச்­செயல் என்று அமெ­ரிக்க அதி­கா­ரிகள் சொல்­வார்கள்.

அத்­த­கைய செயலை ஒரு இஸ்­லா­மியர் செய்­தி­ருந்தால், அது பயங்­க­ர­வா­த­மாகக் கரு­தப்­படும்.

இரண்­டாண்­டு­க­ளுக்கு முன்னர், இரு இஸ்­லா­மிய சகோ­த­ரர்கள் பொஸ்டன் மர­த­னோட்டப் போட்­டியை இலக்கு வைத்து நடத்­திய குண்டுத் தாக்­கு­தல்­களை உதா­ர­ண­மாகக் கூறலாம்.

செச்­சன்ய வம்­சா­வளி த்சார்நெவ் சகோ­தர்கள் எந்­த­வொரு பயங்­க­ர­வாத இயக்­கத்­து­டனும் தொடர்­பு­டை­ய­வர்கள் அல்லர். எனினும், இவர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தப்­பட்­டார்கள். இது பயங்­க­ர­வாத தாக்­குதல் என்ற அடிப்­ப­டையில் விசாரணைகள் முன்னெ டுக்கப்பட்டன.

சார்ள்டன் தேவா­லய துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் பற்றி கருத்து வெளி­யிட்ட அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, வெள்­ளை­யின மேலா­திக்கம் பற்றி பேசி­யி­ருக்­கிறார். தமது நாட்டில் துப்­பாக்­கி­களின் வியா­ப­கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாகவும், இதனை விபரித்திருக்கிறார்.

எனினும், இதனைப் பயங்­க­ர­வா­த­மாக விப­ரிக்கும் தைரியம் அவ­ருக்கு இருக்­க­வில்லை. இத்­த­கைய சிந்­தனைப் போக்கு நீடித்து பிரச்­ச­ினையை சரி­யான முறையில் அணுகும் வரையில், அமெ­ரிக்­காவில் ஆட்­கொ­லை­க­ளுக்கு முடி­வி­ருக்­காது என்றே சொல்லத் தோன்றுகிறது.

-சதீஷ் கிருஸ்ணபிள்ளை-

Charleston_shootin_3346654kPolice captured the white suspect in a gun massacre at one of the oldest black churches in the United States, the latest deadly assault to feed simmering racial tensions. Police detained 21-year-old Dylann Roof, shown wearing the flags of defunct white supremacist regimes in pictures taken from social media, after nine churchgoers were shot dead during a bible study meeting.

Charleston_shootin_3346653kHe was caught at a traffic stop in North Carolina and flown back just hours later to Charleston, South Carolina, the scene of the slaughter in the Emanuel African Methodist Episcopal Church

charleston-shootin_3346743kBooking photos released by Charleston County jail showed a sullen, boyish suspect with a pudding-bowl haircut

charleston-shootin_3346744kThe shooting came at a time of heightened tension in America after several high-profile killings of unarmed black men at the hands of white police triggered protests and a national debate on race.

charleston-onlooke_3345311kPolice talk to a man outside the Emanuel AME Church

charleston-photogr_3345308kPolice briefly detained a man who matched the description of the gunman, however, he was identified as a local photographer and the search continued

charleston-pray-2_3345304kWorshippers gather to pray in a hotel parking lot across the street from the scene of a shooting

Share.
Leave A Reply