உலகம் தோன்றிய கணத்திலிருந்து இந்த கணம் வரை மாறாத ஒரு மந்திரம், மரணத் தறுவாயில் இருப்பவர்களைக் கூட உயிர் பிழைக்க வைக்க வைக்கும் சக்தி வாய்ந்த மந்திரம், வேறென்ன பரிசுத்தமான அன்புதான் அது.

அந்த அன்பெனும் மந்திரத்தின் அற்புதத்தைச் சொல்லி பார்ப்பவர்களின் மனதை  ’கடலில் கொட்டிய பிடி சர்க்கரையாய்’ கரைக்கிறது இந்த வீடியோ.

எய்ட்ஸ் நோயாளிகளை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான சமூக பரிசோதனை (social experiment ) முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் பின் லாந்தைச் சேர்ந்த ஜேன் ஆண்டின் பரபரப்பான சாலை ஓரம் கண்கள் மூடியபடி நின்று மக்களை சோதிக்கிறார்.

தன் மகனிடம் வருங்காலத்தில் நீயும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கி விட்டு ஜேனை நெருங்கும் தாயும், இறுதியில் மக்களின் அன்பால் நெகிழும் ஜேனும், மனிதம் இன்னும் மரத்துப் போகவில்லை என்பதற்கான சாட்சியங்கள்.

Share.
Leave A Reply