யாழ்ப்பாணத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழமைக்கு மாறாக பெண்கள் அணியும் உடையுடன் இப் பெண்கள் போராட்டத்தில் ஈடு பட்டமை குறிப்பிடத் தக்கது.
யாழில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
07-07-2015
யாழ். சாவகச்சேரி – மீசாலை மேற்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கையாலபிள்ளை உதயநாதன் எனத் தெரியவந்துள்ளது.
இன்று காலை 07.30 அளவில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று, பின் வீடு திரும்பியவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.