கிளிநொச்சி, உருத்திரபுரம், எள்ளுக்காட்டு பகுதியில் கடந்த 21 ஆம் திகதி முதல் காணாமல் போன 3 வயது சிறுமியான யர்சிகாவை பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலிசார் துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி உருத்திரபுரம் பகுதியில் காணாமல் போன சிறுமியை தேடி விசாரணைகளை முடிக்கிவிட்ட பொலிசார் பலரிடமும் வாக்கு மூலங்களைப் பெற்ற போதும் எந்த தடயமும் சிக்கவில்லை.
இராணுவ உதவியுடன் எள்ளுக்காட்டு பகுதி சல்லடை போடப்பட்டும் எந்த தகவலும் இல்லை. இந் நிலையில் குறித்த சிறுமி தொடர்பான தகவல்களை அறிந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறு பொலிசார் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
இதேவேளை, சிறுமியை காட்டேறி கடத்திச் சென்று விட்டதாக ஊரில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.