புதுடெல்லி: டெல்லியில் உள்ள WWF-இந்தியா ஆடிட்டோரியத்தில் தீப் கே. தத்தா ரே எழுதிய “The Making of Indian Diplomacy – A critique of euro-centrism” புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவரும் கலந்துகொள்ள வந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினரான மன்மோகன் சிங் ஆடிட்டோரியத்திற்குள் சென்ற பின் காலதாமதமாக வந்தார். முக்கிய பிரமுகர்கள் உள்ளே சென்ற பிறகு யாரும் உள்ளே செல்ல, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் அனுமதிக்காது.

எனவே காலதாமதமாக வந்த அந்த பெண்ணை, ஆடிட்டோரியத்தின் வாயிலில் நின்ற  பாதுகாப்பு அதிகாரி உள்ளே விட அனுமதி மறுத்தார். அதற்கு ‘உன் வேலை விரைவில் போய்விடும் பார்.

நான் நினைத்தால்  உன்னை இங்கேயிருந்து  துரத்த முடியும். ஸ்டுப்பிட் மேன்!’ என்று திட்டுகிறார். இவருடன் பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டிருந்தால் பிரச்னை பெரிதாக ஆகிவிடும் என்பதனால் அமைதியாக இருக்கிறார் செக்யூரிட்டி.

தாமதமாக வந்த இந்தியர் ஒருவரும் அதே பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று அந்த  பெண்மணி ‘I can slap you’ என்று சொல்லிக்கொண்டே அவரது கன்னத்தில் மெதுவாக அறைகிறார்.

அவர் நினைத்தால் பளாரென்று அறைந்திருக்கலாம். ஆனால், என்னால் உன்னை அறைய முடியும் என்று அதிகாரத் தொனியுடன் அவர் அறைந்தது அதிர்ச்சியாக இருக்கிறது.

உடனே இதனை பார்த்து மிகுந்த கோபத்துடன் அங்கு வந்த உயரதிகாரி ஒருவர், அந்த பெண்ணிடம், ” எப்படி பாதுகாவலரை அடிக்கலாம்…? உனக்கு அந்த உரிமை கிடையாது…” என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் அந்த பெண்ணோ மேலும் திமிர்த்தனத்துடன், ” நீ கத்தாதே…!” என்கிறார். அதற்கு அந்த உயரதிகாரி, ” நீ எங்கள் பாதுகாவலரை அடிக்கும்போது கத்ததான் செய்வேன்…!” என்று கடுமையாக கூறுகிறார்.

இதனையடுத்து அந்த பெண், ‘இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுகிறேன்’ என்று கத்திக்கொண்டே அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறார்.

அந்த பெண் வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனத்தெரிகிறது. வாக்குவாதத்தின் இடையே அந்த பெண், இந்தியில் ‘பாகல்…’ ( பைத்தியம் ) என்று திட்டுகிறார். எனவே அவர் வெளிநாட்டில் செட்டிலான வெளிநாட்டு வாழ் இந்தியராக இருக்கக்கூடும்.

அரசாங்கப் பணியில் இருக்கும் ஒரு பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தைரியமாக அறையும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

காட்டுக்குள் தனியாக சிக்கிய காதல் ஜோடி… பயங்கரமாக தாக்கிய இளைஞர்கள்!.

Share.
Leave A Reply