எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ‘நல்லாட்சிகான ஐக்கிய தேசிய முன்னணி’ யை தோற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஜாதிக்க ஹெல உறுமய, சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒருகுழுவினர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தன.

இதுதவிர, சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பாக அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தன மற்றும் அர்ல் குணசேகர ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஜாதிக்க ஹெலஉறுமய சார்பாக பாட்டளி சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரவுப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக அதன் தலைவர் மனோகணேசன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

அத்துடன், குடியியல் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் சிலரும் உடன்;படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக பிரசன்னமாகியிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட எதிர்பார்த்துள்ள அனைத்து கட்சிகளும் 12 பிரதான விடயங்களில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

image-6d06f6fc0445cc309de284171070509efc21a63bbcf1466531fbdb3301f7a04a-V

 

Share.
Leave A Reply