அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.
அங்கு கன்சாசைச் சேர்ந்த ஸ்டான்லி ஆன் துன்ஹம் என்ற வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவரே அதிபர் ஒபாமா.
ஒபாமாவுக்கு 2 வயதாக இருக்கும்போது ஹவாயிலிருந்து படிப்பை தொடர்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு சென்றார் அவரது தந்தை.
பின்னர் கென்யாவுக்கு திரும்பிவிட்டார். பின்னர் 1982-ல் நிகழ்ந்த கார் விபத்தில் ஒபாமாவின் தந்தை பாரக் இறந்தார்..
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நேற்று, தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார்.
இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமா மீது அளவற்ற அன்பு கொண்டிடுக்கும் கென்ய நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.
கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு அந்நாட்டு அதிபர் உஹுரு கென்யத்தா வரவேற்பளித்தார்.
இருபுறங்களிலும் நின்ற மக்கள் கென்ய மற்றும் அமெரிக்க நாட்டின் கொடியை ஏந்தியபடி அவருக்கு வரவேற்பளித்தனர்.
நைரோபியில் உள்ள ஸ்டேட் ஹவுசில் அவர் கென்யாவின் பாரம்பரிய ‘லிப்பாலா’ என்ற நடனத்தை அம்மக்களுடன் சேர்ந்து ஆடினார்.
இந்த வீடியோ அமெரிக்க சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அனைவரும் கோட் சூட் போட்டு இந்த நடனத்தை ஆடுவதால் ‘இது கென்யாவின் கங்ணம் ஸ்டைல்’ என்று அமெரிக்கர்கள் இந்த வீடியோவைக் கொண்டாடி வருகின்றனர்.