பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள அந்­நாட்­டையும் பிரித்­தா­னி­யா­வையும் இணைக்கும் சுரங்கப் பாதை­யினுள் சுமார் 1,500க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிக்க முயற்­சித்த வேளை குறைந்­தது ஒருவர் சொல்­லப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேற்­படி நெருக்­க­டியைத் தடுப்­ப­தற்கு தனது அர­சாங்கம் தன்னால் இயன்ற அனைத்­தையும் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமெரோன் உறு­தி­ய­ளித்­தி­ருந்த நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி சுரங்கப் பாதையில் புதிய வேலி­யொன்றை அமைப்­ப­தற்கு 7 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான நிதி வழங்­கப்­ப­டு­வ­தாக பிரித்­தா­னியா தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் சுரங்கப் பாதையில் உயி­ரி­ழந்த நபர் 25 வய­துக்கும் 35 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டைய சூடா­னியர் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

அவர் டிரக் வண்­டி­யொன்றால் நசுங்­குண்டு உயி­ரி­ழந்­துள்ளார். இந்தக் கோடை காலத்தில் அந்த சுரங்கப் பாதைக்குள் பிரவேசிக்கும் முயற்சியில் உயிரிழந்த ஒன்பதாவது நபராக மேற்படி நபர் விளங்குகிறார்.

Share.
Leave A Reply